உலகின் முதல் பற்றரி(World's First Battery)


1938இல் பாக்தாத் அருகில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கிராமத்தில் வேலையாட்கள் எதற்காகவோ நிலத்தைத் தோண்டிய போது நிலத்தினடியில் ஒரு பொருள் கிடைத்தது. அது பார்ப்பதற்கு ஒரு பூச்சாடி அல்லது குடுவை போல இருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தில் களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது. 6 அங்குல உயரம். 5க்கு 1.5 அங்குலமுள்ள செப்பு(தாமிரம்) தகட்டால் உருளை வடிவ அடிப்பாகம் கருங்காறையால் (asphalt) பற்று வைக்கும் தொழில்நுட்பத்துடன் மூடப்பட்டிருந்தது. இதனுள் பொருத்தும்படியான ஓர் இரும்புத் துண்டு, அதன் மேல் முனை கருங்காறையால் மூடப்பட்டிருந்தது. (இப்பொருளின் காலம் : பார்தியன் காலம் 248 BCE and 226 CE, circal 250 கி.மு. - கி.பி. 225 )

தெற்கு ஈராக்கிலும் (2500 BCE) செப்பிலான குடுவையும் வெள்ளியிலான உருளை பொருத்தப்பட்ட இதே போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன (சுமேரியன் காலத்திய இடங்கள்) இதே போல் இவற்றின் சில பகுதிகள் எகிப்திலும் தொல்லியல் துறையினருக்கு கிடைத்திருக்கின்றன.

ஜெர்மனிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வில்ஹெம் கோனிக் (1940) இதை ஆய்வு செய்து, இது அக்காலத்திய மின்கலம் என்று உறு திப்படுத்தினார். அவர் இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அப்போதே பிரபலப்படுத்தாமல் போனதற்குக் காரணம் உலகப் போர். இது அப்படியே மறந்து போனது. இதனுள் திராட்சைப்பழரசத்தை ஊற்றி பரிசோதித்ததில் இதிலிருந்து 0.87 வோல்ட் மின்சாரம் உருவானது. (அக்காலத்தில் இப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்ற ஓர் அனுமானம்)

அலெக்சான்ட்ரோ வோல்டா கி.பி. 1799இல் எலக்ரோ இரசாயன வியல் மின்கலத்தை (Electro chemical cell) கண்டுபிடித்தார்.
மிகச்சிறிய அளவு கிடைத்த இந்த மின்சாரத்தை வைத்து என்ன செய்திருப்பார்கள் (ஏறக்குறைய 2 வோல்ட்) ஏன் எதற்காக இத்தகைய ஆய்வு?
இந்தக் கலம் நமக்கு முதலில் உணர்த்துவது பெர்சியன் விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் வயர் போன்ற எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை.
மருத்துவத்தில், அக்குபஞ்சர் போல ஊசியை வைத்து வலி உள்ள இடங்களில் இதைப் பயன்படுத்தி மின்சாரத்தை செலுத்திப் பார்த்திருக்கலாம். ஆனாலும் இது பிரியோசனப்பட்டிருக்காது.
பாடசாலையில் இது குறித்து சொல்லிக் கொடுக்க உபயோகித்திருக்கலாம். உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பற்றரி இதுதான்.

Post a Comment

Previous Post Next Post