தலைவலி பிரச்சினையா?(Are You Suffering From Headache Problems?)

தலைவலி அனைவருக்குமே வரும் ஒரு பொதுவான பிரச்சினை தான். சாதாரண தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தலைவலி வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதில் உணவுகளும் ஒன்று. உங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மோசமாக இருந்தால், அதனால் தலைவலியை சந்திக்க நேரிடும். கீழ்வரும் உணவுகளை உட்கொள் வதைத் தவிர்த்தால், தலைவலியில் இருந்து விடுபடலாம்.

அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்!!

பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் காணப்படும் நைட்ரைட்டுகள் சிலருக்குத் தலைவலியைத் தூண்டுவதாகத் தெரியவந்துள்ளது. எனவே நீங்கள் தலைவலியால் அடிக்கடி கஷ்டப்படுபவராயின் ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளாதீர்கள்.

சிவப்பு மிளகாய்


சிவப்பு மிளகாயிலுள்ள கேப் சைசின் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருப்பின், சிவப்பு மிளகாய் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாதீர்கள்.

சிட்ரஸ் பழங்கள்


சிட்ரஸ் பழங்களான தோடம் பழம், எலுமிச்சை, கிவி போன்றவற்றில் தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை உள்ளன. இவை தலைவலியைத் தூண்டிவிடக் கூடியவை. எனவே தலைவலி இருப்பவர்கள், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கோப்பி


கோப்பி உங்கள் சோர்வை நீக்கி, உங்களை எச்சரிக்கையுடன் செயல் பட வைக்கும். இருப்பினும் எதற்கெடுத்தாலும் கோப்பியை அதிகமாகக் குடித்து வந்தால், அதிலுள்ள கஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்தி, தலை வலியைத் தூண்டி விடும்.

ஐஸ்கிரீம்


அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் ஐஸ்கிரீம். ஆனால் இந்த ஐஸ்கிரீம் தலைவலியைத் தூண்டிவிடும் பொருள் என்பது பலருக்கும் தெரியாது. இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், இது தலைவலியைத் தூண்டி விடும். மேலும் ஆய்வுகளில் பங்கு பெற்ற பலரும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பின் தலைவலியை சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post