1928ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி, மாலை நேரம்.உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அந்த நாட்களில் கருதப்பட்ட வர்த்தகர் அல்பிரட் லொவென்டேன், பிரிட்டனின் க்ரொய்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.
அங்கே அவருக்காக அவரது பிரத் தியேக விமானம் தயாராக இருந்தது. அதில் அவர் ஏறினார்.வழக்கமாக க்ரொய்டன் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் நாட்டு கடல் பகுதிக்கு மேலாகப் பறந்து, பெல்ஜியம் நாட்டு தலைநகர் ப்ரசெல்ஸில் தரை இறங்கும். ப்ரசெல்ஸ் நகரில் தான் அல்பிரட் தனது மனைவி மெடலீனுடன் வசித்து வந்தார்.
கோடீஸ்வரர் அல்பிரட்டை அந்த நாட்களில் ஐரோப்பாவில் அறியாத வர்களே கிடையாது. 1ஆம் உலக யுத்தத்துக்கு முன்னரே பெரும் பணக்காரராக இருந்த அல்பிரட், யுத்தம் முடிந்த பின் வர்த்தகத்தில் புகுந்து விளையாடினார். அவர் ஐரோப்பாவில் ஆரம்பித்த பல நிறுவனங்கள்தான், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கும் ஒப்பந்தங்களை பெற்றிருந்தன. நாடுகளுக்கே மின்சாரம் வழங்கும் கொன்ட்ராக்ட் என்றால், இதில் எத்தனை மில்லியனில் பணம் கொட்டும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். பணம் கொட்டிக்கிடந்த அதே நேரத்தில், அவருக்கு ஏராளமான எதிரிகளும் இருந்தனர். அனைவரும் வியாபார ரீதியான எதிரிகள் தான். நாம் குறிப்பிட்ட 1928 ஜூலை ஆம் திகதி, பறப்பதற்கு உத்தமமான தினம். வானம் தெளிவாக இருந்தது. அல்பிரட் செல்ல வேண் டிய விமானம், நன்றாக பரிசோதனை செய்யப்பட்டு, துல்லியமான நிலையில் இருந்தது. விமானத்தை செலுத்த காத்திருந்த விமானி டோனல்டட் ட்ரு, பிளைட் கதவு அருகே நின்று அல் பிரட்டை வரவேற்றபோது, “இன்றைய பயணம் மிகவும் சுலபமாக, எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்கும்” என்றார்.
மற்றவர்களுக்கு எப்படியோ, தமக்கு அது சிக்கல் வாய்ந்த பயணமாக இருக்கும் என்பது, அல்பிரட்டுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமா னத்துக்குள் இருந்த அல்பிரட் திடீ ரென மாயமாக மறைந்து போனார். இந்தச் சம்பவம் நடந்து இப்போது 86 ஆண்டுகளின் பின்னரும், அவர் மாயமாக மறைந்த மர்மம் துலக்கப்படவில்லை . உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்று விட்டார் அல்பிரட்.
Tags:
Tamil WriteUps