முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜோன்சன் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருக்கு, தலைக்கனம் கொண்டவர் என்ற பெயரும் உண்டு. தனது விருப்பு வெறுப்புகளை அகராதியின் அர்த்தத்தில் புகுத்தியவர்.
ஸ்கொட்லாந்து மக்களைப் பிடிக்காது என்ற வெறுப்பை அகராதியில் காட்டியவர். ஓட்ஸ் என்ற வார்த்தைக்கு தானியம் என்று அர்த்தம் சொன்ன ஜோன்சன், "இது ஒருவகைத் தானியம், இந்தத் தானியத்தை இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்கொட்லாந்தில் மனிதர்களும் சாப்பிடுவர்” என்று கூறியுள்ளார்.
10 வருடங்கள் தனியாக உழைத்து, ஆங்கில அகராதியை முடித்தவர் ஜோன்சன். "பிரெஞ்சு மொழி அகராதி 40 மொழி வல்லுநர்களால் ஆண்டுகள் உழைத்து உருவாகியுள்ளது.
எப்படி 10 ஆண்டுகளில் தனியாக முடிக்க முடிந்தது?” என்று நண்பர் ஒருவர் ஜோன்சனிடம் கேட்டுள்ளார். “40 பிரெஞ்சுக்காரர்கள் 40 ஆண்டுகளில் செய்து முடித்ததை ஓர் ஆங்கிலேயன் 10 வருடங் களில் செய்து முடித்ததிலிருந்து, 10 ஆங்கிலேயர் 1600 பிரெஞ்சுக் காரர்களுக்குச் சமம் என்ற உண்மை தெரிகிறது” என்றாராம் ஜோன்சன்.
எதையும் யாரையும் எடுத்தெறிந்து பேசும் ஜோன்சன், தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, அடக்கத்தைப் பின்பற்றியுள்ளார். "உங்கள் அகராதியில் ஒரு வார்த்தையின் அர்த்தம் தவறாக உள்ளது" என்று பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டியபோது, "தவறுக்கு என் அறியாமைதான் காரணம்" என ஒப்புக் கொண் டுள்ளார்.
ஜோன்சன் ஸ்கொட்லாந்து மக்களைப் பற்றி மோசமான எண்ணம் வைத்திருப்பினும் அவரது ஸ்கொட்லாந்து நண்பர் பொஸ்வெல் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு, ஆங்கில இலக்கியத்தில் நிலையான இடத்தைப் பெற்று விட்டது. மேலும், வாழ்க்கை வரலாறு எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரி நூலாகவும் அமைந்தது.

Tags:
Tamil WriteUps