வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள்.அது அந்த காலம், மனம் விட்டு பேசினால் பகை விட்டு போகும் இது இந்த காலம்.(பகை மட்டுமல்ல மன உளைசல்,சந்தேகங்கள்,பயம் இன்னும் பல)
ஒரு பிரச்சனையில் மூன்றாமவர் தலையிட்டு அவரது கருத்துக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்களை தவிர்த்து சம்பந்தப்பட்டவரோடு நேரடியாக கலந்துரையாடி தீர்வினை பெறுவதே சாலச் சிறந்தது.
பின்னொரு காலத்தில் அவ்வாறு கதைத்திருக்கலாமே என எண்ணி வருந்துவது, போய் விட்ட பேருந்திற்கு கை அசைப்பது போன்றது.
பிரச்சனைகளும் அவதூறுகளும் கழுத்தை நெரித்தாலும் வயதிற்கும் அனுபவத்திற்கும் இன்று வரை எங்குமே மரியாதையுள்ளது.
Tags:
Tamil WriteUps