
புறா போன்ற சிறிய பறவைகள் வயதாகி போய் பறக்க முடியாமல் போனால் மனம் நொந்து போகின்றன.அந்த இயலாமையினால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கின்றன.எப்படி? தம் உடல் எடையை விட அதிக எடையுடைய கற்களை விழுங்கி விட்டு மரத்திலிருந்து கீழே குதித்து தரையில் மோதி இறக்கின்றன.பறவையியல் ஆராச்சியாளர்கள் தரும் தகவல் இது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது என்று சொல்ல்கிறோமே அந்த கண் இமைக்கும் நேரம் என்பது எவ்வளவு தெரியுமா ? ஒரு வினாடியில் நாற்பதில் ஒரு பங்கு.

ஆட்டிசம் என்பது நோய் அல்ல.மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறே.பொதுவாக பிறந்த குழந்தையின் 2வது வயதில் இருந்து தான் இந்த குறைபாட்டை அறிந்துகொள்ளலாம்.பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.