Tamil Facts:Episode 6

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால்தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம் பூச்சி தேனின் சுவையை அதன் கால்களால் தான் சுவைக்கிறது.

ஹெட்போன்

தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட் போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணி நேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

யானை

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம்தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை வயிற்றில் சுமக்கும்.

தூசிபடிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்குக் காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாகத் தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்மும்போது, சிலநேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இம்மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களைத் திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் கண்ணீரை வரவைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங்கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.

லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ் டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள றைம்ஸ்களில் மாதம், ஓரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?

நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஓர் உண்மை .

கரப்பான் பூச்சி

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான் பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள். உலகிலேயே வெடி குண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான் பூச்சி என்று தெரியும். ஆனால் அந்தப் பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

Post a Comment

Previous Post Next Post