இரண்டு சக்கரங்களில் கம்பீரமாக பயணிக்கப் பயன்படும் இக்கால நவீன சைக்கிள்களின் உருவாக்கத்துக்கு சில நூற்றாண்டுகால உழைப்பு,சிருஷ்டிப்பு, சிந்தனை,பல கண்டுபிடிப்பாளர்களின் திறமை என்பன தேவைப்பட்டடுள்ளன என்பது நம்மில் அநேகருக்குத் தெரியாத விடயம். பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சைக்கிள்கள் தற்போதுள்ளது போல பயணிப்பதற்கு
இலகுவானதாகவும் வசதியானதாகவும் இருக்கவில்லை . முதன்முதலாக சைக்கிள் எப்போது உரு வாக்கப்பட்டது என்னும் விபரமும் தெளிவாகத் தெரியவில்லை . ஆனால், சில வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்களில் இருந்து பிரான்ஸ் நாட்டு தந்தைதயும் மகனுமாகிய பியரே (Pierre) மற்றும் எர்னஸ்ட் மிச்சோக்ஸ் (Ernest Michaux) என்னும் வண்டிகள் தயாரிக்கும் குழுவினரே 1860 ஆம் ஆண்டு முதல் சைக்கிளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், மேலும் பல வரலாற்றாசிரியர்கள் இதனை மறுக்கின்றனர். அவர்கள் அதற்கு முன்னரே சைக்கிள்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், நவீன சைக்கிள்களில் காணப்படும் பெடல் (Pedal) மற்றும் சுழல வைக்கும் அச்சு (Erank) என்பனவற்றை 1861 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தவர்கள் பியரேயும் எர்னஸ்ட்டும்தான் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஜேர்மனியைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான கார்ல் ட்ரெய்ஸ் (Carl Drais) ஓடும் இயந்திரம் உருவாக்கி இருந்தார். 1871 ஆம் ஆண்டு பிரித்தானிய பொறியியலாளர் COLD ULTITAS (Jaems Starley) பென்னி பார்திங் (Penny Farthing) என்னும் சைக்கிளை உருவாக்கினார். இந்த சைக்கிள் ஆரம்ப காலத்தில் உருவான சைக்கிள்களிலும் பார்க்க ஓரளவுக்கு நவீனத்துவமுடையதாக இருந் தது. இதுவே முதன்முதலில் உருவான ஓரளவுக்கு வசதிமிக்க சைக்கிளாகும். இந்த சைக்கிளின் முன்சக்கரம் பெரிதா கவும் பின்சக்கரம் சிறிதாகவும் இருந்தது. முதன்முதலாக இதுவே சைக்கிள் என்று அழைக்கப்பட்டது. இந்த சைக் கிளில் பெரிய சக்கரமான முன்சக்கரத்தில் பெடல்கள் இணைக்கப்பட்டன. 1885 ஆம் ஆண்டு ஜோன் கெம்ப் ஸ்டார்லி சைக்கிளில் சங்கிலியை இணைத்து இலகுவாக செலுத்தும் முறையை ஏற்படுத்தினார்.
Tags:
Tamil WriteUps