பில்கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜொப்ஸை உலகம் அறிந்ததில்லை . பிலகேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உலக மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்பியூட்டர் உலகைபொறுத்தவரை ஜொப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! அப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜொப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வடிவமைப்பிலும் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபோட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவ்வொன்றுமே கம்பியூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.
ஜொப்சின் தொலைநோக்கு தன்மை ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகுக்கே வழிகாட்டின என்று தான் சொல்ல வேண்டும்.
ஜொப்ஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியும் என்றாலும், அவரது மரணம் தொழில்நுடப் உலகையே உலுக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவில் தொடங்கி, போட்டியாளரான பில்கேட்ஸ் வரை அனைவரும் ஜொப்ஸ் மறைவை பேரிழப்பு என்று வர்ணித்துள்ளனர். டிவிட்டர் உலகிலும் அவரது மறைவு பேரதிர்வை உண்டாக்கியது. நொடிக்கு 10,000 குறும்பதிவுகள் என டிவிட்டர் ஜொப்சை நினைத்து கதறியது. பிரபல வோல் ஸ்டிரீட் ஜர்னல்(Wall Street Journal) நாளிதழ் தொழில்நுட்பத்தோடு மக்கள் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி அமைத்தவர் என புகழாரம் சூட்டியது. "ஜொப்ஸ் போன்ற தொலைநோக்கு மிக்க ஒருவரால் தான் அப்பிள் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும்" எனஅப்பிள் நிறுவனம் கம்பீரமாக இரங்கல் தெரிவித்தது.
"ஜொப்ஸை போல உலகின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய மனிதரை அரிதாகவே பார்க்க முடியும். அவரது பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும்'' என்று பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார். எல்லா இரங்கல் குறிப்புகளிலும் தொலைநோக்கு' என்ற வார்த்தையை தவறாமல் பார்க்க முடிந்தது. "படைப்பாற்றல் மிக்கவர்" என்ற பாராட்டும் இருந்தது. "தொழில்நுட்ப வடிவமைப்பையும் கலையையும் ஒன்றிணைத்த மேதை" என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதியது. உண்மை தான். அப்பிளின் தயாரிப்புகள் எல்லாமே செம ஸ்டைலானவை. கூடவே பயன்பாட்டு தன்மை மிக்கவை. இவை இரண்டும் தான் அப்பிளை உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்த்தியது. இன்று பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜொப்ஸ் உருவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. இன்று தொழில்நுட்ப மேதை என்று உலகமே கொண்டாடும் ஜொப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர் என்பது தான் ஆச்சரியம்.
தொழில்நுட்ப உலகின் தவப்புதல்வன் என்று புகழ்படும் ஜொப்ஸ் உண்மையில் தத்துப் பிள்ளையாக பிறந்தவர். ஸ்டீவ் பால் ஜொப்ஸ் என்பது அவரது இயற்பெயர். 1955 பெப்ரவரி 24 இல் கல்லூரி மாணவ தம்பதிகளுக்கு பிறந்த ஜொப்ஸ், கிலரா மற்றும் பால் ஜொப்ஸுக்கு தத்து கொடுக்கப்பட்டார். சிறுவனாக இருக்கும் போதே அப்பாவுடன் ஜொப்ஸ் வீட்டு கரேஜில் மின்னணு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார். ஜொப்ஸுக்கும் தொழில்நுட்பத்துக்குமான உறவு இப்படி தான் ஆரம்பமானது. அவரைப் படிப்பில் சுட்டி என்ற சொல்ல முடியாவிட்டாலும் சரியான வால் பையனாக தான் இருந்தார். குறும்பு செய்வதில் கெட்டிக்காரராக இருந்த அவரை படிக்க வைக்க ஆசிரியையே லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
எப்போதுமே தனிமை விரும்பியாக இருந்த அவரிடம் அப்போதே 'என் வழி தனி வழி' எனும் மனப்போக்கு இருந்தது. மற்ற மாணவர்களிடம் இருந்து எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் ஜொப்ஸிடம் இருந்ததாக அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓய்வு நேரத்தை மைதானங்களில் செலவிடுவார்கள் என்றால் உயர் நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே ஜொபஸ், எச்.பி. நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு அப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.
தொழில்நுட்ப ஆர்வம் இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. கம்பியூட்டர் விஷயத்தில் வாஸ்னியாக் கில்லாடியாக இருந்தார். இருவருக்கும் பரஸ்பரம் நட்பும் மதிப்பும் உண்டானது.
1972 இல் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை . தத்துவ ஈடுபாடும் எதிர்க்கலாசார ஆர்வம் அவரை அலைக் கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியல் வேலைக்கு சேர்ந்து விட்டார். அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மீக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுற்றித்திரிந்தார். கிளர்ச்சியை தரக் கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜொப்ஸ் 1976 இல் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வவஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஜொப்ஸ் அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன் பிரேம் கம்பியூட்டர் தான். ஒரு பெரிய வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்பியூட்டர்களை எல்லோரும் பயன்படுத்திவிட முடியாது. கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும். வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால், ஜொப்ஸுக்கு கம்பியூட்டர் உருவாக்கத்தை விட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையான கம்பியூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவர் வலியுறுத்தினார்.
வாஸ்னியோக் அதற்கு ஒப்புக் கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினர். ஜொப்ஸ் "பீட்டில் இசைக் குழு" வின் பரம ரசிகர் என்பதால் பீட்டில் பாடல் ஒன்றின் பெயரான அப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார். இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவனத்தை தொடக்கி கம்பியூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜொப்ஸின் வீட்டு கரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வு கூடம்,அதுவே தான் நிறுவனம்.
முதலில் அப்பிள் 1 கம்பியூட்டரை அறிமுகம் செய்தனர். 666 டொலருக்கு சந்தைக்கு வந்த இந்தக் கம்பியூட்டர் அப்போது ஏற்படுத்தியிருக்கக் கூடிய மகிழ்ச்சியை இப்போது நினைத்து பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். காரணம். அப்பிள் கம்பியூட்டர் எளிதானதாக சிறியதாக மலிவானதாக இருந்தது. சாமான்யர்கள் கிட்ட கூட செல்ல முடியாத மைன்பிரேம் கம்பியூட்டரோடு ஒப்பிட்டால் அப்பிள் கம்பியூட்டரை புரட்சிகரமானது என்றே சொல்லலாம். ஒரு விதத்தில் பர்சன்ல் கம்பியூட்டர்களின் தொடக்கமாகவும் இது அமைந்தது. கம்பியூட்டரை ஜனநாயக மயமாக்கும் செயலாகவும் அமைந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து அப்பிள் 2 கம்பியூட்டரை அறிமுகம் செய்தனர். அப்பிளின் வடிவமைப்பு எளிமையாக பயன்பாட்டுத் தன்மை மிக்கதாக இருந்ததால் விற்பனையும் அதிகரித்தது. நிறுவனமும் காலூன்றியது. பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டு பெரிய நிறுவனமானது.
இதே காலகட்டத்தில் தான் சந்தையில் ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கின. போட்டியை சமாளிக்க அப்பிளுக்கு பெப்சி அதிகாரி ஒருவரை ஜொப்ஸ் அழைத்து வந்தார். ஆனால், இதனிடையே மைக்ரோசாப்டின் எழுச்சியும் இன்டெலுடனான அதன் கூட்டணியும் பெரும் வெற்றி பெறவே அப்பிள் திண்டாடியது. 1984 ஆம் ஆண்டும் ஜொப்ஸ் புகழ்பெற்ற மேக்கின்டாஷ் கம்பியூட்டரை அறிமுகம் செய்தார். இதற்கு அவர் பயன்படுத்திய உக்தி இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது. கம்பியூட்டர் என்றால் மேக்தான் என்ற சொல்லக் கூடிய வகையில் மேக்அபிமானிகள் உருவானாலும் சந்தையில் அப்பிளுக்கு சரிவே உண்டானது. இதனிடையே அப்பிள், மவுசை முதலில் பயன்படுத்திய முன்னோடி கம்பியூட்டரான லிசா உட்பட புதிய மாதிரிகளை அறிமுகம் செய்தாலும் விற்பனையில் முந்த முடியவில்லை .
இதனால், நிறுவனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜொப்ஸ் 1985 இல் அப்பிளில் இருந்து விலகி நெக்ஸ்ட் கம்பியூட்டர் என்னும் தனி நிறுவனத்தை தொடக்கினார். அந்த நிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை . அடுத்த பதினொரு ஆண்டுகள் ஜொப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் வின்டோஸ் சக்கை போடு போட தனது ஒப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்காத அப்பிள் திண்டாடி தடுமாறியது. அப்பிள் விற்பனை சரிந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக மீண்டும் ஸ்டீவ் ஜொப்ஸிடமே அப்பிள் தஞ்சமடைந்தது. ஆனால், ஜொப்ஸால் கூட அப்பிளை காப்பாற்ற முடியாது; அப்பிளின் காலம் முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர். ஒரு பக்கம் நஷ்டம் இன்னொரு பக்கம் வேறு திசையில் சென்று விட்ட கம்பியூட்டர் உலகம் என்ற சூழ்நிலையில் தான் ஜொப்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது.
ஆப்பிளின் அடிப்படை பலமான நேர்த்தியான வடிவமைப்பு, எளிமையான பயன்பாட்டுத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஜொப்ஸ் அசத்தலான ஐமேக்(i mac) கம்பியூட்டர்களை அறிமுகம் செய்து திருப்பி பார்க்க வைத்தார். எல்லோரும் கம்பியூட்டர்களிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் எம்பி3(Mp3) வடிவில் பாடல்களை கேட்க உதவும் சாதனமான ஐபாடை (i pod) அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அமெரிக்காவும் அகில உலகமும் ஐபாடு மூலம் அப்பிள் வசமானது. மற்ற எந்த பிளேயரை விடவும் ஐபாடை கையாள்வது எளிதாக இருந்தது. விருப்பமான பாடலை தேட பட்டன் பட்டனாக தட்டிக் கொண்டிருக்காமல் கைவிரல் இப்படியும் அப்படியுமாக நகர்த்துவதன் மூலமே பாடல்களை தேர்வு செய்யும் லாவகத்தை ஐபாட் தந்தது. இந்த எளிமையான வடிவமைப்பு மற்றும் பயன்பாடு தான் ஜொப்ஸின் தனித்தன்மையாக அமைந்தது.
இன்டர்நெட்டில் பாடல்களை டவுன்லோடு செய்வது பெரும் பிரச்சினையாக உருவான நிலையில் ஜாப்ஸ் பாடல்களை காப்புரிமை சிக்கல் இல்லாமல் வாங்குவதற்கான ஐடியூன்ஸ் இணைய இசை கடையை தொடக்கி அடுத்த அஸ்திரத்தை பிரயோகித்து இசைத்துறையை கைப்பற்றினார். எல்லோரும் ஐபாட் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, செல்போன்கள் செல்லும் திசையை புரிந்து கொண்டு ஐபோனை அறிமுகம் செய்தார். டச் ஸ்கிரின் வசதியோடு வந்த அதன் எளிமையும் கம்பியூட்டரின் செயல்திறனும் ஐபோனை (i phone) சூப்பர் ஹிட்டாக்கியது. அடுத்தாக ஐபேடை (ipad) அறிமுகம் செய்து மைக்ரோசாப்டே மண்ணை கவ்விய டேப்லெட் கம்பியூட்டர் சக்தியில் அப்பிள் வெற்றிக்கொடி நாட்டியது.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பிள் தலைவர்பதவியில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜொப்ஸ், மீளா துயிலில் ஆழ்ந்து விட்டார். ஆனால், அவர் உண்டாக்கிய கம்பியூட்டர் புரட்சி என்றென்றும் நிலைத்து நிற்கும்.