கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன? சொந்த பந்தங்கள் நமக்கென வரன் தேடுவார்கள். பக்கத்து வீட்டில், அறிந்தோர் தெரிந்தோர், தரகர் என ஒரு மிகச் சிறிய வட்டத்தினுள்ளேயே மணமகனையோ, மணமகளையோ தேடிக்கொண்டிருந்தோம். பத்தில் ஒன்று என்ற அடிப்படையில், எது நல்ல வரன் என ஆராய்ந்து தேர்ந்தெடுத்த காலம் மாறி, இன்று ஆயிரத்தில் ஒன்றல்ல லட்சங்களில் ஒருவன் ஒருத்தி என தேர்வுகள் அதிகமாகி , இதில் எது நல்ல வரன் மற்றும் நமக்கு பிடித்த வரன் என தேடிக்கொண்டிருகின்றோம். ஆம் மேட்ரி மோனி (matrimonial) விளம்பரங்கள் அப்படி தான் சொல்கின்றன நம்மிடம் ....
மேட்ரிமோனி என்கின்ற பெயரில் பல ராஜாக்கள் இருக்கலாம். ஆனால் இந்தியா முழுவதிலும் ஒரு சாம்ராஜ்யமாகவே வளர்ந்திருக்கும் "Bharat matrimony" பற்றியே நாம் பார்க்கப்போகின்றோம். தமிழ் மேட்ரிமோனியினை உருவாக்கியவர் ஒரு தமிழர், முருகவேள் ஜானகிராமன் ! தமிழ் மேட்ரிமோனி "பாரத் மேட்ரிமோனியின்" ஒரு அங்கம். இந்தியாவில் நுகர்வோர் சார்ந்த இன்டர்நெட் கம்பெனி என பங்குச்சந்தையால் தமிழ் நாட்டிலிருந்து பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனம்தான் இந்த பாரத் மேட்ரிமோனி - இந்த அளவிற்கு இந்த நிறுவனத்தினை எப்படி உயர்த்தினார் திரு. முருகவேள் ஜானகிராமன் என சற்று பார்ப்போம்.
முருகவேள் ஜானகிராமன் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர். ராயபுரத்தில் பதினாறு ஒண்டிக் குடித்தனங்களைக் கொண்ட மின்சார வசதிகூட இல்லாத ஒரு வீட்டிலேயே இருபத்தியிரண்டு வருடங்கள் வாழ்ந்துவந்தவர். இவரது வாழ்க்கை யின் முதல் லட்சியமே படித்து வேலைக்குப் போனதும் கரண்ட் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றுவிடவேண்டும் என்பதுதானாம். BSC statistics படித்து முடித்ததும் மெட்றாஸ் யூனி வர்சிட்டியில் MCA படிக்கின்றார். அவர் படித்த MCA அவர் வீட்டில் மட்டும் விளக்கேற்ற காரணமாயிருக்கவில்லை. பிற்பாடு லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற காரணமாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். தான் வேலை பார்த்த ஒரு சிறிய நிறுவனத்திலிருந்து விலகி சிங்கப்பூர் சென்று வேலை பார்க்கின்றார் முருகவேள் ஜானகிராமன். அதன் பின் அங்கிருந்து அமெரிக்கா சென்று software consultant BP வேலை பார்க்கின்றார். அப்போதுதான் தன்னுடைய ஓய்வு நாட்களில் ஏதேனும் தமிழ் வெப்சைட் ஆரம்பிக்க யோசிக்கின்றார் ஜானகிராமன். அப்போது நிறைய ப்லோக்ஸ் (blogs), வெப்சைட் என தாராளமாக வரத்தொடங்கிக்கொண்டிருந்த காலகட்டமது (1997). எனவே, எல்லோரையும் போலல்லாது சற்று வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு கட்டுரை வடிவில் தன்னுடைய வெப்சைட் இல்லாமல் application வடிவில் இருந்தால் நன்றாயிருக்கும் எனத்தோன்றியது. Application என்றால் என்னமாதிரியான application ? அதாவது அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் எதையெல்லாம் தமிழ் நாட்டில் "miss” பண்ணுகின்றார்களோ, அதையெல்லாம் கொடுக்கலாம் என எண்ணி தனது முதல் வெப்சைட்டினை 1997 April 14 ஆரம்பித்தார் . முதலில் அவர் கொண்டுவந்தது daily calendar. அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ராகுகாலம்,
எமகண்டம் , சுபநேரம் என எதை வேண்டுமானாலும் இந்த கலண்டரினை பயன்படுத்தி அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது அந்த தினசரி நாற்காட்டி. அதன்பிறகு அந்த application இல் Tamil greetings cards, Tamil make friends, Tamil festival reminders, Tamil chat service, Tamil discussion forum, Tamil kolangal என தொடர்ந்தும் பல சேவைகளை வழங்கிக்கொண்டேயிருந்தார் .1998 இறுதிப்பகுதியில் மேற்குறிப்பிட்ட applications போலவே matrimony என்ற ஒன்றையும் சேர்த்துக்கொண்டார் . மணப்பெண்ணுக்கு ஒன்று, மணமகனுக்கு ஓன்று என்ற ரீதியில் இரண்டேயிரண்டு பக்கங்களை மாத்திரமே கொண்டதாக அந்த application வடிவமைக்கப் பட்டிருந்தது.
அப்பொழுதெல்லாம் இவரைப்பார்த்து இவரது நண்பர்கள் நையாண்டி செய்வார்களாம். "விடுமுறையில்கூட வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்காமல் தமிழ் வெப்சைட் நடத்துகிறேன் என ஏன் நேரத்தை விரயமாக்குகின்றாய் ? அதிலிருந்து ஏதேனும் வருமானம் வந்தாலும் பரவாயில்லை , அப்படியும் இல்லை பின்னே ஏன் இதற்காக மினக்கெடுகின்றாய்?" என அவர்கள் சலித்துக்கொள்வார்களாம். அதற்கு ஜானகிராமன் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், இது எனக்கு ஜாலியாக இருக்கின்றது என்பாராம் சிரித்துக்கொண்டே ஒருநாள் தன்னுடைய எந்தெந்த பக்கங்களை எத்தனைபேர் பார்வையிட்டுள்ளனர் என ஜானகிராமன் பார்த்துக்கொண்டிருந்தபோது , மேட்ரி மோனி பக்கத்தினை நிறையபேர் பார்வையிட்டிருப்பதனை அவதானிக்கின்றார், அந்த நிமிடம் அவருக்கு தோன்றிய ஓர் எண்ணம்தான் பின்னாளில் பில்லியன் பெறுமதியான பிசினஸ் ஐடியாவாக மாறியது என்றால் மிகையில்லை அதாவது matrimony website மட்டும் இத்தனை பேரால் பார்வையிடப்படுகின்றது என்றால், ஏன் அதை தனியாக ஓர் வெப்சைட்டாக உருவாக்கக்கூடாது என எண்ணி, உடனே செயலில் இறங்கினார் . தனது சொந்த ஊரான சென்னை ராயபுரத்தில் எவ்வளவு தமிழ் மக்கள் இருக்கின்றார்களோ, அந்த அளவிற்கு தெலுங்கர்களும் இருப்பர். எனவே, தமிழ் மேட்ரிமோனி, தெலுங்கு மேட்ரிமோனி என இரண்டையும் ஆரம்பிக்கலாம் என எண்ணியபோது, அட ஒரே வெப்சைட் கொஞ்சம் மாற்றிப்போட்டால் இதிலிருந்து பல வெப்சைட்களை உருவாக்கிவிடலாமே என முடிவெடுத்து பஞ்சாபி மேட்ரிமோனி , குஜராத் மேட்ரிமோனி , ஹிந்தி மேட்ரிமோனி என மொத்தம் பதினான்கு மேட்ரிமோனி சேவைகளை பாரத் மேட்ரிமோனி (Bharat matrimony) என்ற பெயருடன் 2000 April 14 தமிழ் புத்தாண்டு அன்று ஆரம்பித்தார் இலவசமாக! அட, சொல்லிவைத்தாற்போல் பல திருமணங்கள் இந்த பாரத் மேட்ரிமோனி தயவால் மளமளவென்று நடந்தேறுகின்றன . இதற்கிடையில் தன்னுடைய வெப்சைட் மூலமாகவே குஜராத் வாழ் தமிழ்ப்பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து தானும் திருமணம் செய்துகொள்கின்றார் ஜானகிராமன்,
அமெரிக்காவில் வேலை , அப்போது தான் திருமணம் முடிந்திருக்கின்றது, தன்னுடைய சொந்த வீட்டை கட்டிக்கொண்டிருக்கின்றார் இப்படி எல்லாமுமே நல்லபடியாக நடந்துகொண்டிருந்த போதுதான், ஓர் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்கின்றார் ஜானகிராமன். அமெரிக்காவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்தினால் ஏதோ காரணத்திற்காக வெளியேற்றப்படுகின்றார் ஜானகிராமன் . மிகவும் சோதனையான காலகட்டமது அவருக்கு. எனினும் வேலை போய்விட்டதே என உற்காந்து உடைந்து அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ? எது நடந்தாலும் பரவாயில்லை சமாளித்துக்கொள்ளலாம் என நம் எண்ணம் திடமாக இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாதுதான் போலும்!
அப்படிதான் உறுதியாக இருந்தார் முருகவேள் ஜானகிராமனும் தனது வேலை பறிபோனதுதான் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனக்கூறும் அவர் , அது வரைகாலமும் தன் ஆசைக்காக திருப்திக்காக இலவசமாக செய்துவந்த மேட்ரிமோனி வெப்சைட்டினை அப்போதுதான் பிஸினஸாக பார்க்க ஆரம்பிக்கின்றார். இதுவரைகாலமும் மேட்ரி மோனி தகவல்களை இலவசமாக கொடுத்துவந்த அவர் அதன்பின் வருடத்திற்கு ரூபாய் முன்னூறு வசூலிக்கப்படும் என அறிவித்தார். ஆகவே இப் போது free service, paid service ஆக மாறியது Paid service என்றால் அந்த முன்னூறு ரூபாயினை எப்படி கட்டுவார்கள்? Online?! இந்தக் காலத்திலேயே நாம் Online Net banking, credit card, debit card என பயன்படுத்தி பணம் கட்ட யோசிக்கும்போது, சுமார் பத்து வருடங்களுக்கு முன் யார் online இல் பணம் கட்ட முன்வருவர்? இந்த பிரச்சினைக்கு யோசித்து சாதுர்யமாக “doorstep" என்ற தீர்வினை முன்வைத்தார் ஜானகிராமன் . அதாவது வீட்டிற்கே வந்து பணத்தை பெற்றுக்கொள்வது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் தன்னுடைய கிளைகளை விரிவுபடுத்தினார். குறுகிய காலத்தினுள் internet மூலம் மிக அதிகமான திருமணங்களை நடாத்திவைத்த நிறுவனம் என்பதற்காக 2006 November 02இல் “limca" விருதும் கிடைக்கப்பெற்றது. அதேயாண்டில் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியதுடன் இந்தியா முழுவதிலும் கிளைகளை உருவாக்கத்தொடங்கியது பாரத் மேட்ரிமோனி . இது போதுமா என்ன? உலகம் முழுவதிலும் வெற்றிபெற நினைத்து உலகின் பல பாகங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் நோக்குடன் venture global மற்றும் yahoo மூலம் 45 கோடி கடன் பெற்று அதன்மூலம் உலகெங்கிலும் விரிவாக்கம் செய்தார்.
அமோகமாக சென்றுகொண்டிருந்த நிறுவனம் 2008இல் சில சறுக்கல்களை சந்திக்க நேரவே, நிறுவனம் கொஞ்சம் நஷ்டப்பட்டது. எனினும் ஜானகிராமனின் கடின உழைப்பினாலும், இரவும் பகலும் தன் அலுவலக கணக்குவழக்குகளை தானே முன்னின்று சரிபார்த்து ஏகப்பட்ட "cost cutting" செய்து வெறும் ஆறே மாதங்களில் மீண்டும் தன் நிறுவனத்தினை பழைய நிலைக்கு உயர்த்தினார் . "Time management" என்றவொன்றையும் இவர் அறிமுகப்படுத்தினார். அதாவது 9.44 திட்டம் என்பது அதன் பெயர் - பல மாநிலங்களிழும் உள்ள மேட்ரிமோனி அலுவலர்கள் மிகச் சரியாக 9.44கு ஆஜாராகிவிடவேண்டும். நிறுவன உரிமையாளர் ஜானகிராமனே 9.45கு வரநேர்ந்தாலும்கூட அவருக்கே அனுமதி மறுக்கப்பட்டது என்றால் மிகையில்லை.
2008குபின் மேட்ரிமோனியில் privilege matrimony, Elite matrimony, look and like service என நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார் ஜானகிராமன் - Privilege matrimony என்றால் திருமணத்திற்கு வரன் பார்க்கவேண்டும் என்றாலும் ப்ரொபைல் (profile) செக் பண்ணக் கூட நேரமின்றி பிசியாக இருக்கும் செல்வந்தர்களுக்கு பொருத்தமாக ப்ரொபைல் தேர்வு செய்து கொடுப்பது . Elite matrimony என்றால் கோடிகளில் புரளும் சிலருக்கு அவர்களது தகுதிக்கு ஏற்றாற்போல் ப்ரொபைல் தேர்வுசெய்து கொடுப்பது , look and like என்றால் நயன்தாரா மாதிரி பெண் வேண்டும் , துல்கர் சல்மான் மாதிரி மணமகன் வேண்டும் என கூறினால் கிட்டத்தட்ட அவர்களது சாயலில் உள்ள ப்ரொபைல் முழு வதையும் உங்களிடம் அனுப்பிவைப்பார்கள் . கொஞ்சம்கொஞ்சமாய் NRI, UK Canada, USA, Sri Lanka, Dubai, Malaysia என நாடு கள் கடந்து , religious matrimony , community matrimony, professional matrimony , education matrimony , divorced matrimony, 40+ matrimony என கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட மேட்ரிமோனிக்கள் பாரத் மேட்ரி மோனியின் கீழ் இப்போது உள்ளன. மேலும் இந்தியாவில் "wedding industry" என்பது மிகப்பெரிய சந்தையினைக் கொண்டது. ஒவ்வொருவருடமும் திருமண செலவுகள் மட்டும் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டி விடுகின்றனவாம். ஆகவே தமிழ் மேட்ரிமோனி வெறுமனே match makingஇல் மட்டும் நின்றுவிடாது , திருமணம் சம்பந்தப்பட்ட மற்றைய சேவைகளிலும் தன்னை இணைத்துக்கொண்டது. Matrimony photography, matrimony catering, thamboolya.com , matrimony mandap.com (இதன் மூலம் திருமண மண்டபங்களை தேர்வு செய்துகொள்ளலாம் ) என திருமணம் சம்பந்தப் பட்ட அத்தனை தேவைகளையும் கண்டறிந்து அவற்றையும் பிசினஸாக செய்ய ஆரம்பித்தனர். இன்று நூற்றிமுப்பது அலுவலகங்களை இந்தியா முழுவதிலும் கொண்டுள்ள மேட்ரிமோனி, 2019 அறிக்கையின்படி 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பினைக்கொண்டுள்ளது .
பாரத் மேட்ரிமோனியின் உரிமையாளரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் ஒன்றுள்ளது.
அவர் இந்த பிசினஸ்சினை தொடங்கும்போது நிச்சயம் நிறைய பேர் சொல்லியிருப்பார்கள் மேட்ரிமோனி என்றால் தரகர் வேலைதானே என! ஆனால் எளிமையான ஓர் தரகர் வேலையினை இன்று உலகம் முழுக்க ஒரு "brand' ஆக மாற்றியிருக்கின்றார் முருகவேள் ஜானகிராமன்! ஆகவே இதை வாசித்துக்கொண்டி ருக்கும் உங்களுக்கு கூட ஒரு பிசினஸ் ஐடியா இருக்கும். ஆனால் , இவ்வளவு படித்துவிட்டு இதையெல்லாம் ஒரு பிசினஸ்ஸாக செய்வதா என்கிற தயக்கம் உங்களிடம் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் களைந்துவிட்டு செய்யும் தொழிலை எப்படி வித்தியாசமாக திறம்பட செய்வது என்பதை மட்டும் சிந்தித்தோமானால், நாமும் ஓர்நாள் நிச்சயம் வெற்றிபெறலாம் இல்லையா?