தொலைக்காட்சி, அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. உலகின் மூலை முடுக்கெல்லாம் நடக்கும் சம்பவங்களை, ஒரு குடையின் கீழ், நேரடியாகவும், உடனடியாகவும் நம் கண் முன்னே கொண்டுவரும் அற்புத தொழில்நுட்ப சாதனம். 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா? என அதிசயித்த உலகம், அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு, உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்து கூட பார்த்திருக்காது.
அத்தகைய உன்னத தொலைக் காட்சியை உலகுக்குத் தந்தவர் இங் கிலாந்தை சேர்ந்த John Logie Baird. முதல் முதலில் 1936 ஆம் ஆண்டு பி.பி.சி. நிறுவனம் நிகழ்ச்சிகளை ஒளி பரப்பத் தொடங்கியது. யுனெஸ்கோவின் உதவியால் 1959ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம் ஆனது.
1976ஆம் ஆண்டு படத்தொகுப்பு வசதி வந்தது. 1982 ஆம் ஆண்டு வண்ண ஒளிபரப்பு வசதி. வெளிப்புறப் படப்பிடிப்பு, ஒலிப்பதிவு (Dubbing) வசதிகள் வந்த பின், இவையாவும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட தொடர்கள், மக்கள் வாழ்வியல் கட்டமைப்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றன.
தெரு முனைகளிலும், வீட்டு முற்றத்திலும் கூடி பேசியவர்களை வீட்டிற்குள் அமரவைத்தது தொலைக்காட்சி தொடர்கள். திரையரங்குகளுக்கு சென்று படங்கள் பார்ப்பது குறைந்தது. தொலைக்காட்சித் தொடர்களை பலர் விரும்பி பார்த்ததால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினர் விளம்பரதாரர்கள். மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியை இப்போது கருதுகிறார்கள்.தொலைக்காட்சியின் தாக்கம் அறிந்து, மக்களை கவர இலவச வண்ண தொலைக்காட்சி என்ற அறிவிப்பும் அரசியல் களத்தில் காணும் அளவுக்கு, தொலைக்காட்சி பரிமாணம் மாறியது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் தொலை காட்சியிலும் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன காலத்தில் சாம்சங், எல்.ஜி , பனசோனிக் ஆகியவை மிக பெரிய அளவு திரை கொண்ட தொலைக்காட்சிகளை உருவாக்கி வைத்துள்ளன.
அதே போல் தற்போது பிளாஸ்மா தொலைக்காட்சி, உள்ளங்கை திரை செல்லிடை தொலைக்காட்சி என பல ரகங்கள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. முதலில், ஆண்டெனா மூலம் டிவி. பிறகு கேபிள் டிவி, பிறகு டிஷ் ஆண்டனா, பின் டிடிஎச் என தொழில் நுட்ப முன்னேற்றத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு, தற்போது கைபேசியிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.தற்போது தொலைக்காட்சி என்பது, பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாது, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையும், உலகளாவிய செய்திகளையும், அரசியல் நிகழ்வுகளையும், விவாதங்களையும் முன்னெடுக்கிறது. மக்களோடு மக்களாக இருந்து, அவர்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் கொடுப்பது என சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, மக்களையும் அதில் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சி ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றால், அது மிகையல்ல.

Tags:
Tamil WriteUps