இன்றைய இந்த உலகம் மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதனால், யாருமே காலதாமதம் என்றவொன்றை விரும்புவதேயில்லை . அந்தவகையில், சில காலத்திற்கு முன்புவரை நாம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றால் பேரூந்து சேவையிலேயே முழுமையாக தங்கியிருந்தோம். பரீட்சையோ, நேர்முகத் தேர்வோ, மருத்துவமனைகளுக்கு கூட நோயாளிகளையும் இழுத்துக்கொண்டு எப்போது வருமோ, எப்படி வருமோ என காத்திருந்து, கூட்டத்தில் சிக்குண்டு நையப்புடையுண்டு வியர்த்து விறுவிறுக்க பேரூந்துப் பயணங்களின் மோசமான அனுபவங்களால் நொந்து போகாதவர்கள் யாராவது இருக்கக்கூடுமா?
குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு சென்று சேர்ந்துவிடுவோமா இல்லையா என்கிற பதட்டம் நிறைந்த காலம், கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்றம் கண்டு ஆட்டோக்களுடன் பேரம்பேசி அதில் சவாரி செய்வதே ஒரு லக்ஸரி வாழ்க்கை என எண்ணியத்தும்போய் இன்று போக்குவரத்து என்பது "அப்படியொன்றும் மோசமான அனுபவமில்லைதான் போலும்", என்று சொல்லும் அளவிற்கு இன்றைய போக்குவரத்து துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக் கின்றன, அவற்றில் ஒன்றுதான் டாக்ஸி சேவை. அப்படி மக்களுடைய பயண அனுபவத்தினையே மாற்றிப்போட்ட டாக்ஸி நிறுவனங்களுள் ஒன்றான "Ola Cabs" பற்றியே பார்க்கவிருக்கின்றோம்.
அந்த வளர்ச்சியின் பின்னால் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் , ஓட்டுனர்களின் போராட்டங்கள் என புதைந்து கிடந்தாலும் ஓலா இன்று சாதாரண மக்களின் போக்குவரத்து சாதனங்களில் இன்றியமையாதவொன்றாகிப்போனது என்பதை யாராலும் மறுக்கவியலாது. இன்று அறுபதுலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓலாவில் இணைந்துள்ளதுடன், சுமார் ஆறாயிரம் ஊழியர்கள் (ஓட்டுனர்கள் தவிர்த்து ) பணிபுரிகின்றனர் . இந்த பத்து வருடங்களில் , ஓலாவின் மொத்த சொத்து மதிப்பு 310 மில்லியன் அமெரிக்கா டாலர் .
எவ்வளவுதான் படித்திருந்தாலும் , கௌரவம் பாராது ஓட்டுனர்கள் கிடைக்காத போது தானே ஒரு ஓட்டுநராக மாறி சேவையினை தொடங்கினார் அல்லவா பாவிஷ்? இந்த எளிமைதான் புதிதாக பிசினஸ் தொடங்க நினைப்போர் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது போலும் . நமது வாழ்க்கை எளிமையானதாக இருந்தாலும் எண்ணங்கள் உயர்வானதாய் இருந்தால் நாமும் ஓர்நாள் நிச்சயம் வெற்றிபெறலாம்.

மும்பையில் 100 சதுர அடியில் உள்ள ஓர் சிறிய இடத்தில் ஆரம்பிக்கப்பட், இன்று இந்தியா மட்டுமல்லாது UK, Australia, new Zealand என நான்கு நாடுகளில் நூற்று அறுபத்தொன்பதுக்கும் அதிகமான நகரங்களில் தங்களது கிளைகளை வைத்திருக்கக்கூடிய ஓலா (Ola) நிறுவனதின் ஸ்தாபகர்கள் பாவிஷ் அகர்வால் (Bhavish Agarwal)மற்றும் அன்கித் பாதீ (Ankit bhati). பஞ்சாப் லூதியானாவில் பிறந்த பாவிஷ் அகர்வால் B.tec computer science ( IAT bombay) 2008ல் முடித்தவர் . அதன்பின் இரண்டு வருடங்கள் Microsoft research centerல் வேலை பார்க்கின்றார் - IATயில் படிப்பு , Microsoftல் வேலை என வாழ்க்கை பிரச்சினையின்றி நகர்ந்தாலும் பாவிஷ் ஏனோ தானும் ரிஸ்க் எடுத்து இன்னும் பெரிய அளவிற்கு செல்ல வேண்டும் என நினைக்கின்றார் . எனவே தன்னுடைய வேலையை விட்டு விட்டு ஒரு startup ஆரம்பிக்கலாம் என யோசிக்கின்றார் .
எந்த துறையினை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை முழுவதிலும் அலுக்காமல் இருக்கும் என யோசித்து இறுதியாக அவர் தேர்ந்தெடுத்ததுதான் "Travel'' . நாடு முழுவதிலும் பல பயணங்களை மேற்கொண்டு பல தகவல்களையும் ஆராய்ந்து சேகரித்து ola trip.com என்கிற பெயரில் ஓர் website ஆரம்பித்தார் . இந்தியாவில் செல்லவேண்டிய இடங்கள் பற்றின விபரங்கள், அதற்கான செலவுகள் பற்றின websiteதான் அது. ஆனாலும் பாவிஷ் எதிர்பார்த்ததைப்போல் இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை . ஏனெனில் அந்த website நிறைய மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே தன்னுடைய websiteனை promote செய்வதற்காக ஓர் உக்தியினை கைக்கொண்டார் பாவிஷ். 2010, டெல்லியில் நடந்த Commonwealth போட்டியில் காலை முதல் மாலைவரை மைதானத்திற்கு வெளியே நின்று அவரது packageனை விற்பனை செய்ய முயன்றார். ஆனாலும் நாள்முழுவதும் காத்திருந்ததுதான் மிச்சம் ஒன்றுகூட விற்பனையாகவில்லை.
இதனால் நிறையவே சோர்ந்துபோனார் பாவிஷ் எங்காவது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் அந்தப் பயணம் கண்டிப்பாக ஒரு திருப்புமுனையாக நம் வாழ்க்கையில் மாறக்கூடும் என்று சொல்வார்களே? அது போன்றதொரு பயணம்தான் அன்று பாவிஷ் மேற்கொண்டதும் ! பெங்களூரில் இருந்து மந்திபூர் வரையில் ஓர் வாடகைக்காரில் பயணம் செய்து கொண்டிருந்த பாவிஷ்ற்கும், கார் ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட கார் வாடகை தொடர்பிலான பிரச்சினையில் பேசிய தொகையை விட அதிகமான தொகையினை ஓட்டுனர் கேட்க, பாவிஷ் அதை மறுக்க நடுவழியிலேயே அந்த டிரைவர் பாவிஷ்சை இறக்கிவிட்டு சென்று விடுகின்றார் . அப்போதுதான் அவருக்கு ஒருவிடயம் புரிந்தது. இந்தியாவில் Travel package கொடுப்பதற்கு நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் நகரங்களுள் சரியான வாடகையில், சரியான வாகனமொன்றை கொடுக்கின்ற ஓட்டுநர்கள் தான் யாருமில்லை என புரிந்து கொள்கின்றார். ஆகவே, நாம் ஏன் வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் இடையே ஓர் ஏஜென்ட்டாக தொழிற்படகூடாது என யோசிக்கின்றார். உடனே தனது நண்பர் அங்கித் பாத்தியுடன் சேர்ந்து 03/12/2010ஆண்டு "ola cab service''ஐ ஆரம்பித்தார்.
மும்பையில் நூறு சதுரடி அளவிளாலான கார் கராஜில் ஆரம்பிக்கப்பட்ட ஓலாவில் ஆரம்பத்தில் மிகமிக குறைந்தளவிலேயேயான ஓட்டுநர்களே இணைந்துகொண்டனர். இதனால் பல சமயங்களில் புக்கிங் வருகின்றபோது, பாவிஷ் தனது நண்பரது காரினை வாங்கிச்சென்று தானே பிக்கப் ட்ராப்பிங் செய்து விடுவார்.
வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் வண்டியை வாடகைக்கு விட வேண்டும், அதேசமயம் நிறுவனத்திற்கும் நல்ல லாபம் கிடைக்கவேண்டுமென்றால் நிறைய ஓட்டுநர்கள் ஓலாவில் இணைந்தால் தான் அது சாத்தியமாகும் என்பதை உணர்ந்து ஓர் உத்தியை பயன்படுத்தியது ஓலா - அதாவது ஒரு நாளைக்கு ரூபாய் ஐயாயிரம் ஓட்டுநர்களுக்கான சம்பளமாக கொடுக்கப்பட்டது இதுபோக ஏகப்பட்ட மேற்கொடுப்பனவுகள் வழங்கப்படவே , ஓலாவின் கவர்ச்சிகரமான இந்த சம்பளத் திட்டங்களால் கவரப்பட்டு ஏனைய நிறுவனங்களில் ஓட்டுநர்களாக இருந்தவர்களும் கூட அந்த வேலையை உதறிவிட்டு ஓலாவில் வந்து இணைந்து கொண்டனர் .
அப்போதுதான் ஓலா ஒரு பிரச்சினையினை எதிர்கொண்டது - பெருநகரங்களில் வசிப்போருக்கு தாம் எங்கே போக வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லத் தெரிந்திருந்த அவர்களால் தாம் இருக்கும் இடத்திற்கு தெளிவாக வழி சொல்லத்தெரியவில்லை . அதில் பலருக்கு தன் வீட்டிற்கு வருவதற்கே வழி சொல்வது கடினமானதாக இருந்தது . இந்த பிரச்சினையினை தீர்க்கவே ஓலா தன்னுடைய எல்லா ஓட்டுனர்களுகும் SmartPhone மற்றும் GPRS வைத்துக்கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தியது.இந்த இலகு நடைமுறையினால் ola அசுர வளர்ச்சி கண்டது எனலாம்.