“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
என்ற வள்ளுவனின் வாசகத்திற்கு இணங்க கல்வி என்பது இன்றைய சமுதாயத்தில் எவ்வாறு காணப்படுகிறது? என்ற வினாவை வினவும் பட்சத்தில் அதற்கான ஒரு விடையாகவே இணையவழி கல்வியானது காணப்படுகின்றது. ஆதி காலம் முதல் கல்வி செயற்பாடானது மாற்றம் அடைந்திருந்தாலும் கூட கல்வியானது நேரடிக் கல்வியாகவே காணப்பட்டது. வரலாற்று அடிப்படையில் ஆரம்பத்தில் மாணவர்கள் ஆசிரியரின் வீட்டில் இருந்து கல்வி கற்கும் ‘குருகுலக்கல்வி’முறையே காணப்பட்டது. அக் கல்வி முறையானது மாணவர்களை அதிகளவான பயிற்சி முறைகளில் அதிக ஆர்வத்தை தூண்ட கூடிய வகையிலேயே அமைந்து காணப்பட்டது. இதை நாம் புராண,இதிகாச கதைகள் வாயிலாக அறியலாம். இதனைத் தொடர்ந்து வந்த காலகட்டததில் மாணவர்கள் பாடசாலை கல்வி முறை காணப்பட்டது. ஆனால் தற்கால சூழலில் தீவிரமாக பரவிய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாணவர்களினுடைய கல்வி நடவடிக்கைகளானது. பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் அறியத்தக்கதே!
மாணவர்கள் நேரடிக்கல்வியை தொடரமுடியாத காரணத்தினால் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை இணையவழி “ஒன்லைன்” மூலமாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலைத்தேய நாடுகளில் இவ் இணையவழி கல்வியானது பெரிதும் துரிதமாக வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட இலங்கையை பொறுத்தமட்டில் இணையவழி கல்வி என்பது மாணவர் மத்தியில் பாரிய ஒரு சவாலாகவே காணப்படுகின்றது. திடீரென அறிமுகம் செய்யப்பட்ட இந்த கல்வி முறையினால் கல்வியை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொழினுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பல சிக்கல்களை எதிர்நோக்கியதை அறிய முடிகிறது.
குறிப்பாக வடக்கு,கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக் கல்விமுறை எட்டாக்கனியாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது இணைய வகுப்பிற்கு கலந்து கொள்வதற்காக 50 கிலோ மீற்றர் இற்கும் அதிகமான தூரத்திற்கு மாணவர்கள் சிலர் பயணம் செய் வேண்டிய துர்பாக்கிய நிலையும் காணப்படுவதை அறியலாம். துகவல் தொழினுட்பப் வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய கைபேசிக்குள் அடங்கிவிட்டது எனலாம் இவ் இணையவழி கல்விக்கு துணை புரிவனவாக அதிதிறன் பேசி (Smart Phone ), மடிக்கணினி (Laptop) கணினி (Computer) முதலான தொழினுட்ப கருவிகள் துணை புரிகின்றன. இவ் இணையவழி கல்விக்தாக Google meet,Zoom,TeamLink,Webinar முதலான செயலிகளும் அறிமுகமாயிருப்பதை அறியலாம்.
இணையவழி கல்வியினூடாக மாணவர்கள் நன்மை,தீமை ஆகிய இரண்டையுமே பெற்றுக்கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை. இணையவழியில் நடைபெறும் நீண்ட நேர வகுப்புக்களால் திறன்பேசி,கணினி போன்றன வெப்பத்தால் பலவீனமடையும் சூழலும் உள்ளது. அதோடு மாணவர்களுக்கு தலைவலி, கண்பாதிப்பு,மன அழத்தம் போன்ற உளவியற் பிரச்சனைகளை எற்படவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது வகுப்புக்கள் நடைபெறும் போது இடையிடையே விளம்பரங்கள் வருவதால் கவனச் சிதறல்கள் ஏற்பட்டு தேவையற்ற விடையங்களை பார்பதில் அதிக ஆர்வவம் செலுத்துபவர்களாக மாணவர்கள் காணப்படுவதனையும் நாம் காணமுடிகிறது. அதோடு திறனபேசி எல்லா மாணவர்களிடமும் இருக்காமையும் அப்படி இருந்தாலும் கூட இணைய இணைப்பு கிடைகாமையும் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களால் இக்கல்வியை பெறமுடியாமையும் மற்றும் இதனால் மாணவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு என்பன ஏற்படுகின்றமையும், வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சில மாணவர்கள் பங்கேற்க முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டமையையும் நாம் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு இணையவழி கல்வி மூலம் மாணவர்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டாலும் கூட இணையவழி கல்வி என்பது இன்றைய சமுதாயத்தில் பெரிதும் தேவைப்பாடுடைய ஒன்றாகவே காணப்படுகிறது எனலாம். இணையவழிக்கல்வி எல்லா வசதிகளோடு இருந்த இடத்தில் இருந்தவாறு கல்வி கற்கவும் மாணவர்களின் கற்றல் அறிவு திறனை வளர்த்து எடுக்கவும் உதவுகிறது எனலாம். அதோடு பாடசாலை மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் புது வரவாக இன்று இணையவழிக்கல்வி அமைகிறது. அத்துடன் எல்லா நிலைகளிலும் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள தூண்டுகோளாய் இணையம் விளங்குகிறது. என்பதை கூறுவதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
இணையவழி கல்வியினூடாக ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு சரியான தீர்வுகளை இனங்கண்டு அவற்றை திருத்தி அமைக்கும் பட்சத்தில் இணையவழி கல்வி மாணவர் மத்தியில் தேவை உடையதாக அமையும். இனி வரும் காலங்களில் பொது முடக்க காலத்தில் எளிமையாகக் கல்வி கற்றிட ஏற்ற ஒரே வழிதான் இணையவழிகல்விதான் என்பதும் மிகையாகாது. அது மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களின் தொழிநுட்ப அறிவை காட்டிலும் எமது மாணவர்களினுடைய தொழிநுட்ப அறிவானது குறைவாகவே காணப்படுகின்றது. ஆதனை விருத்தி செய்து மாணவர்களின் அறிவு மட்டத்தை உயர்த்தும் வகையிலும் இவ் இணையவழி கல்வியானது அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது எனலாம்.
அவ்வகையிலேயே முடிவாக “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற கூற்றிற்கு இணங்க கல்வி முறையிலும் புதிய புதிய திருப்பங்களை கொண்டு வந்து இனிவரும் எமது சமுதாயத்தினருக்கு நல்வழியை காட்டுவதாக கல்விமுறை அமைய வேண்டும். கல்வி வளமே நாட்டினுடைய மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். அவற்றை கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து அனைவருக்கும் பயனுள்ள வகையில் வழங்குவது எமது மனிதாய கடமை எனலாம்.
“கண்ணை மூடி கனிவுடன் நீ படித்தால். கனவில் எண்ணியபடியே உன் வாழ்க்கை” எனும் கூற்றிற்கிணங்க நாம் கல்வியை பெறலாம். என முடிவாக கூறிக் கொள்ளலாம்.
Tags:
Tamil WriteUps