சினிமா உடைய வரலாற்றுல பிலிம் மேக்கிங்க(Film Making) மாற்றி அமைத்த பல ஜாம்பவான்கள் இருக்காங்க அப்படி பல மைல்கல் மாற்றங்களை உருவாக்கித் தந்த ஜாம்பவான்களில் முக்கியமானவர் ஜேம்ஸ் கேமரூன். வெறும் பிலிம் மேக்கிங் மட்டுமல்ல சினிமா பார்க்கக்கூடிய எக்ஸ்பீரியன்ஸ்சையும் ஒட்டுமொத்தமாக மாற்றி அமைச்சு பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தணும்னு யோசிச்சு அதை நிகழ்த்தியும் காட்டுனவர் ஜேம்ஸ் கேமரூன். அவர் பெயருக்கு பின்னாடி இன்னைக்கு ஏகப்பட்ட சாதனைகள் இருக்கு ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி அவர் ஒரு சாதாரண பஸ் டிரைவரா தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அந்தப் பயணத்தில் அவர் என்ன மாதிரியான சவால்களை சந்தித்தார். அதை எப்படி எல்லாம் ஜெயிச்சாரு. அவதார் திரைப்படம் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் எப்ப அவதாரம் எடுத்தார். ஐ மீன்(I Mean) எப்போ பிறந்தாரு இப்படி ஏகப்பட்ட உண்மைகளை அவருடைய வரலாறோட சேர்த்துப் பார்க்கலாம்.
ஒரு படத்த எடுக்க பத்து வருஷத்துக்கு மேல காத்திருந்து அதுக்கப்புறம் அதை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து அவ்வளவு பட்ஜெட்ல எடுத்த அந்த படத்தை அதுக்கப்புறம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கி சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட கோடிகளில் கலெக்ஷன் பார்க்க வைக்கிறதெல்லாம் ஜேம்ஸ்கேமரூனால மட்டும் தான் முடியும்.
நம்மள புல்லரிக்க வச்ச டெர்மினேட்டர்(Terminator), நக்கலா சிரிக்க வச்ச ட்ரூ லைஸ்(True Lies), பயமுறுத்தின ஏலியன்ஸ்(Aliens), மூணு நாளைக்கு அழ வச்ச டைட்டானிக்(Titanic), பரவசம் ஆக்கின அவதார். இந்த மாதிரி வெற்றி படங்களை கொடுத்து நம்ம மனசுல நீங்காத இடம் பிடித்தவர் தான் ஜேம்ஸ் கேமரூன். வெறும் பாட்டுக்கெண்டு இல்லாமல் சிஜிஐ(CGI) பயன்படுத்துவதற்காகவே கதைக்களம் அமைச்சு அதை படமா எடுத்து நமக்கு தந்த உண்மையான பிரம்மாண்ட இயக்குனர் தான் ஜேம்ஸ் கேமரூன்.சொல்லப்போனா அவர் எடுத்த படங்களில் டெர்மினேட்டர்(Terminator),பிரானா(Piranha) அப்புறம் ட்ரூ லைஸ்(True Lies) மாதிரியான திரைப்படங்களை தவிர்த்து மற்ற எல்லா படங்களுமே அகாடமி அவார்ட்ஸ்ல(awards) விஷுவல் எபெக்ட்ஸ்க்காக(Visual effects) நாமினேஷன் வாங்கி இருக்கு அதுலயும் பல படங்கள் அத வின்(Win) பண்ணவும் செஞ்சிருக்கு.
ஏன்னா எல்லா பசங்களும் ஏதாவது ஒரு பக்கம் போய் விளையாடுற சமயத்துல ஒன்னு வானத்தை நோக்கி உயரமா போகக்கூடிய பில்டிங்கை கட்டிட்டு இருப்பாராம். இல்லன்னா பூமிக்குள்ள ஆழமாக போற மாதிரியான குழியைத் தோண்டிக்கொண்டு இருப்பாராம். இதுதான் அவருக்கான பிடித்த விளையாட்டா அவருக்கு சின்ன வயசுல இருந்திருக்கு.
அவர் ஸ்கூல் படிச்சிட்டு இருந்த சமயத்தில் அவருடைய பிரெண்ட்ஸ் உடைய ப்ராஜெக்ட் எல்லாம் கூட அதாவது ஸ்கூல் ப்ராஜெக்ட் எல்லாம் கூட இவர்தான் கன்ஸ்ட்ரக்ட் பண்ணியே தருவாராம். அப்படி அவருக்கு இன்ஜினியரிங் மேல ஒரு தீராத ஆசை என்பது இருந்திருக்கு. இந்த சின்ன வயசுல கன்ஸ்ட்ரக்ஷன் செய்து விளையாடுவது மட்டும் இல்லாம சயின்ஸ் பிக்சன் நாவல் மேலயும் அவருக்கு ரொம்ப ஆர்வம் இருந்து இருக்கு.
இப்படி ஒரு ஓவியரா அவர் இருந்ததுனாலேயே இயல்பாகவே அவருக்கு சினிமா மாதிரியான கலை வடிவங்கள் மேல ஒரு ஆர்வம் என்பது இருந்துச்சு. ஆனா அந்த ஆர்வம் அதிகமாகி சினிமா தான் தன்னுடைய எதிர்காலமா இருக்க போகுது அப்படின்னு அவர் முடிவு எடுத்ததற்கு காரணம் ஒரு திரைப்படம் ஸ்டார் வார்ஸ்(Star Wars). ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை பாத்ததுக்கு அப்பறமா தான் நானும் இதே மாதிரி சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எடுக்கணும் என் மனசுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கக்கூடிய சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளை மக்கள் கிட்ட இந்த மாதிரி பிரம்மாண்டமாக கொண்டு போய் சேர்க்கணும் அப்படிங்கற பேரார்வம் என்பது ஜேம்ஸ் கேமரூன் மனசுல ரொம்ப ஆழமா விதைத்தது.
அதே சமயத்துல அவருடைய மனசுல ஒரு காதலும் வளர்ந்துச்சு அவர் தங்கியிருந்த இடத்துக்கு பக்கத்துல இருந்த ரெஸ்டாரன்ட்ல ஒரு வெயிட்டிரஸ்(Waitress) வேலை பார்த்துட்டு இருந்த ஷேர் ரூம் வில்லியம்ஸ்(Sharon Williams) அப்படிங்கிற பெண்ணை அவர் காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டார் ஜேம்ஸ் கேமரூன். அதுக்கப்புறம் அந்த பஸ் டிரைவர் வேலையை தொடர்ந்து செஞ்சுகிட்டு தனது சினிமா கனவை நிஜமாக்குறதற்கான முயற்சியில் ஈடுபட்டார் ஜேம்ஸ் கேமரூன். அந்த முயற்சியில அவர் முதல் முதல்ல ஒரு ஷார்ட் பிலிம்(Short Film) ஒன்னு எடுத்தாரு. 1978ல அவர் எடுத்து அந்த முதல் ஷார்ட் பிலிம் உடைய பெயர் ஜனோஜெனிசிஸ்(XENOGENESIS) அந்த ஷார்ட் பிலிம் ஓட கதையும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையா தான் தான் இருந்துச்சு. அதாவது உலகம் அழிந்து கொண்டு இருக்கிறது. அந்த அழிந்து கொண்டு இருக்கிற உலகத்துல மனித சமுதாயத்தினுடைய கடைசி நம்பிக்கையாக ராஜ் அப்படிங்கிற ஒரு மனுஷன் இருக்கான் அவன் கூட லாரி அப்படிங்கற ஒரு பெண் அதுவும் மெஷினால வளர்க்கப்பட்ட பெண் இருக்கா இவங்க ரெண்டு பேரும் உலக அழிஞ்சுட்டு இருக்கு இதுக்கு அப்பறமா ஒரு புது உலகம் நமக்கு கிடைக்குமா புதிய கிரகம் ஏதாவது கிடைக்குமா அப்படின்னு தேடிப் போறதுதான் இந்த கதைக்களமா இருந்துச்சு. இப்படி அப்பவே உலகம் அழிய போகுது அடுத்த உலக எங்க இருக்கு அப்படின்னு மனிதர்கள் தேடுற மாதிரி அதாவது கிட்டத்தட்ட அவதார்(Avatar) உடைய பிரீக்குவலா(Prequel) யோசிச்சி இருக்காரு ஜேம்ஸ் கேமரூன்.
அதுக்கப்புறம் சினிமா துறையில் அவருக்கான முதல் வாசல் எப்ப திறந்துச்சுன்னா ராக்கெண்ட் ரோல் ஹை ஸ்கூல்(Rock 'n' Roll High School) அப்படிங்கற திரைப்படத்தில் அவர் ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் தான் வேலைக்கு சேர்ந்தப்பதான். அப்படி அதுல புரோடக்சன் அசிஸ்டன்டா வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சினிமாத்துறையில் வளர ஆரம்பிச்சாரு ஜேம்ஸ் கேமரூன்.
படிப்படியாக ஒவ்வொரு ஒரு துறையா வேலை பார்த்துகிட்டு இருந்தவருக்கு பிரானா படத்துல ஒரு பெரிய வாய்ப்புங்கிறது கிடைத்தது. பிரானாஎண்டா பிரானா ஃபர்ஸ்ட் பார்ட் இல்ல பிரானா செகண்ட் பார்ட். முதல்ல பிரானா செகண்ட் பார்ட்ட வேற டைரக்டர்தான் டைரக்ட் பண்ண வேண்டி இருந்துச்சு.
ஆனால் டைரக்டருக்கும் ப்ரடியூசருக்கும் சண்டை வந்ததுனால ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. இப்ப அந்த படத்தை யார் டைரக்ட் பண்றது அப்படிங்கற நிலைமை இருந்துச்சு. அந்த சமயத்துல அந்தப் படத்தில ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கான டைரக்டரா சேர்ந்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். நீயே இந்த படத்தை டைரக்ட் பண்ணி இருப்பா என்று சொன்னாங்க. அடடே ஒரு டைரக்டராக ஆக வேண்டும் என்று கனவோடு இருந்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதே அத யூஸ் பண்ணிப்போம் எண்டு யோசிச்ச ஜேம்ஸ் கேமரூன் அந்த படத்தை டைரக்ட் பண்றதுக்கு ஒத்துக்கிட்டு டைரக்சன் வேலையில் இறங்கினார். ஆனா ஏன்டா இறங்கணும்னு பீல் பண்ற அளவுக்கு ப்ரொடியூசர் உடைய டார்ச்சர்ல சிக்கி சின்னாபின்னமானர் ஜேம்ஸ் கேமரூன்.
அந்த ப்ரொடியூசர் பண்ணின டார்ச்சர்ல்ல தூங்க முடியாமல் தவித்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.அதுக்கப்புறம் ஒரு வழியா அந்த படம் என்பது வெளிவந்துச்சு ஆனா பெரிய அளவுக்கு அது பேசப்படல நான் தான் டைரக்டர் என்று அந்த படத்துல பெயர் இருந்தாலும் அந்த படத்தை நான் உண்மையிலேயே டைரக்ட் பண்ணலன்னு அதுக்கு அப்புறமா ஒரு பேட்டில சொன்னாரு ஜேம்ஸ் கேமரூன்.
ஆனா தூக்கம் இல்லாம தவிச்ச நாட்களில் தான் அவருக்கான வரலாறு படைக்கப் போற கதை கரு என்கிறது அவருக்கு கிடைத்தது அதுவும் தூக்கத்தில. சரியான தூக்கம் இல்லாமல் இருந்ததாலே என்னவோ அவருக்கு ஒருநாள் ஒரு மோசமான கனவு என்பது வந்துச்சு அந்த கனவுல ஒரு ஸ்கெலிட்டன்(Skeleton) மாதிரியான ஷேப்ல இருக்கக்கூடிய ஒரு சைபோர்க் ரோபோ(Cyborg Robot) என்கிறது அவர கொல்ல முயற்சி பண்ணி இருக்கு அதை பார்த்து மிரண்டு போய் தூக்கத்திலிருந்து எந்திரிச்சு உட்கார்ந்து இருக்காரு.அவர் கனவில் பார்த்த அந்த சைபோர்க் ரோபோ உருவங்கிறது அவர் மனசுக்குள்ளே நின்னு உறுத்திக்கொண்டே இருந்துச்சு. அந்த ரோபோவுக்கு ஒரு பேக் ஸ்டோரி(Backstory) டெவலப் பண்ணலாம் அப்படின்னு யோசிச்சாரு. அதுல கிடைத்ததுதான் டைம் ட்ராவல் அந்த டைம் ட்ராவல் அடிப்படையா வச்சு ஒரு கதைக்களத்தை உருவாக்கினார் அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கின திரைப்படம் தான் டெர்மினேட்டர்.
அதுக்கப்புறமா அவருடைய அடுத்த படைப்புக்கான வேலையில இறங்கி அதையும் பிரம்மாண்டமா செஞ்சு பெரிய அளவுக்கு வெற்றி பெற்று தந்தார் ஜேம்ஸ் கேமரூன். அதுதான் ஏலியன்ஸ். எந்த அளவுக்கு பிரமாண்டமான வெற்றியா இருந்துச்சுன்னா கிட்டத்தட்ட நூத்தி முப்பது மில்லியன்(130 million) டாலர் அளவுக்கான வருமானத்தை அந்த படம் என்பது கலெக்ட் பண்ணி தந்துச்சு. அந்த டைம்ல அது மிகப்பெரிய ஒரு வெற்றியா கொண்டாடப்பட்டது. வரிசையா சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எடுத்துட்டு இருந்தவரு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம் அப்படின்னு யோசித்து எடுத்த திரைப்படம் தான் ட்ரூ லைஸ்(True Lies) அர்னால்ட்(Arnold Schwarzenegger) வச்சு காமெடி பண்ண முடியும் அப்படின்னு எல்லாருக்கும் அந்த படத்தில் காமிச்சிருப்பாரு.
அதுக்கப்புறமான காலகட்டத்தில அவர் மனசுல ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்த ஒரு கதையை எடுத்து உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சாரு. அந்த கதைதான் அவதார். இந்த அவதார் கதையை அவர் எப்போ எழுதினார் தெரியுமா 90களுடைய தொடக்கத்திலேயே அவர் எழுதிட்டாரு. அந்த கதை எழுதுனதுக்கு அப்புறமா அதை திரைப்படமா எடுக்கனும் அப்படிங்கற முயற்சியில் அவர் இறங்கினப்பதான் அவருக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. ரொம்ப அட்வான்ஸா யோசிச்சு நம்ம கதை எழுதிட்டோம் இத திரைப்படமா எடுக்கிற அளவுக்கான டெக்னாலஜி இப்போ இல்ல அது எப்ப வருதோ அப்போ இந்த படத்தை எடுத்துக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணி அந்த கதையை அப்படியே மூடி வச்சிட்டு அதுக்கப்புறம் அவர் எடுத்த திரைப்படம் தான் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட்டான டைட்டானிக். டைட்டானிக் உடைய கதையை எடுத்தீங்கன்னா ரொம்ப சாதாரண ஒரு கதை தான். ஏழை பையன் ஒரு பணக்கார பொண்ண காதலிக்கிறான் அவளை திருமணம் செஞ்சுக்கணும் அப்படின்னு ஆசைப்படுகிறான் இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் டைட்டானிக்கதை. நம்ம தமிழ் சினிமாவில ஏற்கனவே அரைச்ச புளிச்ச மாவு தான் இது.
இவ்ளோ சாதாரணமான ஒரு காதல் கதையை எடுத்து ஆனா அது எப்படிப்பட்ட சூழலில் அமச்சாரு அப்படிங்கிறலதான் ஜேம்ஸ் கேமரினுடைய திறமை என்பது அடங்கி இருக்கு. டைட்டானிக் கப்பல் உண்மையிலேயே கவிழ்ந்து போனப்போ அப்போ அதுல எவ்வளவு மரணங்கள் ஏற்பட்டுச்சு எவ்வளவு சோகங்கள் நிறைந்த ஒரு நிகழ்வா அது இருந்துச்சு அப்படிங்கிறத நம்ம கண்ணு முன்னாடியே நிறுத்துன திரைப்படம் அது. டைட்டானிக் படம் 1997-இல் வெளிவந்த சமயத்துல கிட்டத்தட்ட ரெண்டு பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கான லாபத்தை உலகம் முழுக்க அது ஈட்டிச்சு. அவ்வளவு பெரிய லாபத்தை அதுக்கப்புறமா வேற எந்த திரைப்படமும் முறியடிக்கவே இல்லை. 12 வருஷம் கழிச்சு அதுக்கப்புறம் ரிலீசான அவதார் திரைப்படம் தான் மூன்று பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கான வருமானத்தை ஈட்டி அத முறியடித்தது.
இப்படி தலகீழா உடைச்சு தொடர்ந்து சாதிச்சுக்கிட்டே இருக்காரு ஜேம்ஸ் கேமரூன். அவர் சொன்ன ஒரு கருத்தை சொல்லி முடிக்கலாம் என்று நினைக்கிறேன். "உங்களுக்கு நீங்களே ஒரு எல்லைகளை வகுத்துக் கொள்ளாதீர்கள். மத்தவங்க தான் உங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பாங்க அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடி வேண்டாம் என்னால இவ்வளவுதான் முடியும் இவ்வளவு தான் செய்ய முடியும் அப்படின்னு யோசிக்காம என்னால எதுவும் முடியும் அப்படின்னு யோசிக்க ஆரம்பிங்க பெரிசா ஜெயிக்க முடியும்." அப்படின்னு சொல்லுவாரு அதே மாதிரி நாமளும் எல்லைகளை கடந்து ஓடிக்கிட்டே இருப்போம் பெருசா ஜெயிப்போம்.
ஒரு படத்த எடுக்க பத்து வருஷத்துக்கு மேல காத்திருந்து அதுக்கப்புறம் அதை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து அவ்வளவு பட்ஜெட்ல எடுத்த அந்த படத்தை அதுக்கப்புறம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கி சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட கோடிகளில் கலெக்ஷன் பார்க்க வைக்கிறதெல்லாம் ஜேம்ஸ்கேமரூனால மட்டும் தான் முடியும்.
நம்மள புல்லரிக்க வச்ச டெர்மினேட்டர்(Terminator), நக்கலா சிரிக்க வச்ச ட்ரூ லைஸ்(True Lies), பயமுறுத்தின ஏலியன்ஸ்(Aliens), மூணு நாளைக்கு அழ வச்ச டைட்டானிக்(Titanic), பரவசம் ஆக்கின அவதார். இந்த மாதிரி வெற்றி படங்களை கொடுத்து நம்ம மனசுல நீங்காத இடம் பிடித்தவர் தான் ஜேம்ஸ் கேமரூன். வெறும் பாட்டுக்கெண்டு இல்லாமல் சிஜிஐ(CGI) பயன்படுத்துவதற்காகவே கதைக்களம் அமைச்சு அதை படமா எடுத்து நமக்கு தந்த உண்மையான பிரம்மாண்ட இயக்குனர் தான் ஜேம்ஸ் கேமரூன்.சொல்லப்போனா அவர் எடுத்த படங்களில் டெர்மினேட்டர்(Terminator),பிரானா(Piranha) அப்புறம் ட்ரூ லைஸ்(True Lies) மாதிரியான திரைப்படங்களை தவிர்த்து மற்ற எல்லா படங்களுமே அகாடமி அவார்ட்ஸ்ல(awards) விஷுவல் எபெக்ட்ஸ்க்காக(Visual effects) நாமினேஷன் வாங்கி இருக்கு அதுலயும் பல படங்கள் அத வின்(Win) பண்ணவும் செஞ்சிருக்கு.
அப்படி எதிர்கால டெக்னாலஜி இன்னைக்கே செஞ்சு பார்க்கணும்னு யோசிக்க கூடிய தொலைநோக்கு சிந்தனையாளனாகவும் அதை செஞ்சு காட்டக்கூடிய சாதனையாளனும் இருக்கக் கூடியவர் தான் ஜேம்ஸ் கேமரூன். அது இன்னைக்கு நேத்து இல்ல அவருடைய சின்ன வயசுல இருந்தே அந்த பழக்கம் அவருக்கு இருந்திருக்கு.
கனடாவில 1954வது வருஷம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் பிறந்தவர் தான் ஜேம்ஸ் கேமரூன். அவருக்கு கூட பிறந்தவங்க நாலு பேர் அவர்தான் மூத்தவர். அவருடைய அப்பா ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினியரா வேலை பார்த்துட்டு இருந்தாரு அவருடைய அம்மா ஒரு ஆர்டிஸ்ட்டாவும் அதே சமயம் நர்சாகவும்(Nurse) வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அவருடைய அப்பா எலக்ட்ரிக்கல் இன்ஜினியரா இருந்ததனாலேயே அவருக்கு சின்ன வயசுல இருந்தே இன்ஜினியரிங் மேல ஒரு தீராத ஆசைகள் இருந்துச்சு அதுலயும் சிவில் இன்ஜினியரிங் மேல இருந்துச்சுன்னு சொல்லலாம்.
அதுக்கப்புறம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிசிக்ஸ் படிப்பதற்காக சேர்ந்தார் ஜேம்ஸ் கேமரூன். ஆனா என்ன காரணத்துனாலையோ பிசிக்ஸ் வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டு இங்கிலீஷ் படிக்கிறதுக்காக அவர் ஸ்ட்ரீம் மாறினார். ஆனா அதுக்கப்புறமும் இங்கிலீஷ் படிக்கிறதே வேண்டாம் ஒட்டுமொத்தமா நமக்கு படிப்பே வேணாம்னு முடிவு பண்ணிட்டு பல்கலைக்கழகத்துக்கு மூடு விழா போட்டுட்டு வேலை தேட ஆரம்பிச்சாரு ஜேம்ஸ் கேமரூன்.
அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த வேலை என்கிறது ஒரு பஸ் டிரைவர் வேலை. அவர் தங்கி இருந்த இடத்துக்கு பக்கத்துல இருந்த ஸ்கூல்ல பஸ் டிரைவராக அவர் வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு சினிமாவுக்கான ஆசைங்கிறது துளிர்விட ஆரம்பிச்சது. சின்ன வயசுல இருந்தே வரையக்கூடிய திறமை என்கிறது ஜேம்ஸ் கேமரூனுக்கு இருந்தது. அந்த திறமை எங்கிருந்து வந்துச்சுன்னா அவருடைய அம்மாகிட்ட இருந்து தான் வந்துச்சு சொல்லப்போனா அவங்க அம்மாதான் அவருக்கு வரையறதுக்கு பழக்கப்படுத்தியே தந்தாங்க அவ்வளவு ஏன் டைட்டானிக் படத்துல ரோஸ ஜாக் வரையிற மாதிரி ஒரு சீன் வரும் இல்ல அதுல உண்மையிலேயே அத வரைந்தது ஜேம்ஸ் கேமரூன்தான்.
ஆனால் டைரக்டருக்கும் ப்ரடியூசருக்கும் சண்டை வந்ததுனால ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. இப்ப அந்த படத்தை யார் டைரக்ட் பண்றது அப்படிங்கற நிலைமை இருந்துச்சு. அந்த சமயத்துல அந்தப் படத்தில ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கான டைரக்டரா சேர்ந்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். நீயே இந்த படத்தை டைரக்ட் பண்ணி இருப்பா என்று சொன்னாங்க. அடடே ஒரு டைரக்டராக ஆக வேண்டும் என்று கனவோடு இருந்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதே அத யூஸ் பண்ணிப்போம் எண்டு யோசிச்ச ஜேம்ஸ் கேமரூன் அந்த படத்தை டைரக்ட் பண்றதுக்கு ஒத்துக்கிட்டு டைரக்சன் வேலையில் இறங்கினார். ஆனா ஏன்டா இறங்கணும்னு பீல் பண்ற அளவுக்கு ப்ரொடியூசர் உடைய டார்ச்சர்ல சிக்கி சின்னாபின்னமானர் ஜேம்ஸ் கேமரூன்.
Tags:
Tamil WriteUps