தென்னாபிரிக்காவின் "சோஸா" என்னும் பழங்குடிமக்களில் ''தெம்பு" என்னும் ஒரு பிரிவினர் வாழ்ந்து வந்தார்கள் ‘’தெம்பு” மக்களின் தலைவனாக காட்லா என்பவரை நியமித்திருந்த போதிலும் பிரித்தானியாவின் கீழே அவர்கள் நடக்க வேண்டியிருந்தது. ஆபிரிக்கர்கள் பல பெண்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் உள்ளவர்களாக காணப்பட்டனர். அந்தவகையில் காட்லாவுக்கும் நான்கு மனைவியர்கள் காணப்பட்டனர். காட்லாவின் மூன்றாவது மனைவிக்கு 1918 ம் ஆண்டு ஜீலை மாதம் 18ஆம் திகதி “குனு” கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார்.
“கமாடா” என்னும் கடவுளை “சோஸா”இன மக்கள் தமது பாரம்பரிய கடவுளாக வணங்கினர்.எனினும் நெல்சன் மண்டேலாவின் தாயாரே முதன் முதலில் கிருஸ்தவ மதத்திற்கு மாறினார். இதன் பின்னர் நெல்சன் மண்டேலாவும் கிருஸ்தவராக மாற்றப்பட்டார். இதன் பின்னரே நெல்சன் மண்டேலா 7 வயது முதலாவதாக பாடசாலைக்கு பார்க்கச் சென்றார்.
நெல்சன் மண்டேலாவுக்கு 16 வயதில் "விருந்ந சேதனம்" செய்யப்பட்டது. "விருந்ந சேதனம்" செய்த பின்பே ஒருவன் இளைஞன் ஆகின்றான் என்பது “சோஸா”மக்களின் வழக்கமாகும். தங்கச் சுரங்க வேலைகளில் சோஸா கறுப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக வைத்திருந்ததுடன் அவர்களுக்கான சரியான ஊதியக் கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுத்துவிட்டனர். இவற்றை எல்லாம் அறிந்த நெல்சன் மண்டேலாவுக்கு தம் மக்கள் சொந்த மண்ணில் படும் துன்பங்களை கேவலமாக நடத்தப்படுவதை கண்டு விடுதலை உணர்வு மனதில் தீ கொண்டது. வெள்ளைத்தோல் கொண்ட மிருகங்களிடமிருந்து தம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் தினமும் அதிகரித்தது.
நெல்சன் மண்டேலாவும் வெள்ளையர்களால் பல முறை அவமானப்பட்ட போதிலும் தன் இன மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆப்போது யூத உயர் அதிகாரியான “லாஸர் சிடெல்ஸ்கி”யின் நட்பு கிடைக்கப்பெற்றது. தன் இன மக்களின் அடிமை வாழ்க்கை, துன்பம் என்பவற்றை யூத அதிகாரியிடம் மண்டேலா எடுத்துக் கூறினார்.
அதற்கு அந்த “லாஸர் சிடெல்ஸ்கி”என்னும் யூத அதிகாரி “நீ வழக்கறிஞராக மாறினால் மட்டுமே உன் இன மக்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்” அதற்கு நீ இப்போது இருந்தே உன்னை தயார்ப்படுத்த வேண்டும் என விடுதலை வேட்கையை விதைத்தார். இதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலாவும் மும்முரமாக விடுதலையை நோக்கி செயற்படத் தொடங்கினார்.
பகுதி நேரமாக சட்டக்கல்வியை 1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்கில் கற்றார். ஆபிரிக்க தேசிய கட்சியில் இணைந்து 1943ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார். தென்னாபிரிக்கா அரசை கலைக்க முயன்றதாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் 1956ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா கைதுசெய்யப்பட்டார். 67போராளிகள் கொல்லப்பட்ட 1960 ஆம் ஆண்டு ஷார்ப்பில் சம்பவத்தினை தொடர்ந்து தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. இனி அஹிம்சை போராட்டம் எந்த வித பலனையும் தராது என நம்பி ஆயுதம் ஏந்த போராட முடிவெடுத்தார்.
பதினேழு மாத தலைமறைவின் பின்னர் புதிய இயக்கத்தின் தலைவராக 1961 ஆம் ஆண்டு வன்முறைப் போராட்டத்தை தொடங்கினார். எனினும் 1962 ஆம் ஆண்டு 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜொகனஸ்பேர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 25ஆம் திகதி அக்டோபர் கிடைக்கப்பெற்ற தீர்ப்பின் பிரகாரம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கப்பெற்றது. எனினும் 1964ஆம் ஆண்டு ஜீன் 12ஆம் திகதி இராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 18 ஆண்டுகள் ரோபன் தீன என்ற சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது.
நெல்சன் மண்டேலாவின் தாயார் 1968 ஆம் ஆண்டு இறந்த போதும் அவரின் மரணச் சடங்கில் பங்குபற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆண்டுகளில் தென்னாபிரிக்கா அதிபர் இனி மேல் போராட்டங்களில் ஈடுபடாவிட்டால் விடுதலை செய்வதாக கூறிய போதும் அதனை ஏற்க மறுத்தார் . நெல்சன் மண்டேலா அவரது உறுதியான நம்பிக்கை கறுப்பின மக்களை ஒன்றுபட ஊக்கப்படுத்தியது. நெல்சன் மண்டேலாவை விடுவிக்க கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனைக் கண்ட உலக நாடுகள் தென்னாபிரிக்கா அரசை இறுக்க ஆரம்பித்தனர். 1986ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அரசின் மீது உலக நாடுகள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு பொருளாதார தடையினை விதித்ததன் பின்னரே தனது தவறுகளை உணர்ந்தது தென்னாபிரிக்கா அரசு.
நெல்சன் மண்டேலாவுக்கு அவரது தந்தையான காட்லா வைத்த பெயர் "ரோலிலாலா மண்டேலா" ஆகும். நெல்சன் மண்டேலா அவரது ஏழு வயது வரை ஆபிரிக்கா சிறுவனாக வேட்டையாடுதல் மற்றும் குச்சிச் சண்டை என்பவற்றைக் கற்று வீரம் மிக்க சிறுவனாக காணப்பட்டான்.

இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் இருண்ட யுத்தத்தின் வெண்ஒளியாக கறுப்பு இனத்தர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைராக திகழ்ந்தார்.
நெல்சன் மண்டேலா உலக அமைதிக்கான நோபல் பரிசினை 1993 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். முதன் முறையாக கறுப்பின மக்கள் 1994 ஆம் ஆண்டு ஏப்பிரல் 26ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. மே மாதம் 10ஆம் திகதி முதல் கறுப்பின ஜனாதிபதியாக தென்னாபிரிக்காவில் பதவியேற்றார். தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க பாடசாலைகளில் தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி , குஜராத்தி ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க 1998 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார்.
நெல்சன் மண்டேலா 1990ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி விடுதலை பெற்றதுடன் அப்போதைய பிரதமர் டி.கினார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீதான தடைகளை அகற்றினார். இதனைத் தொடர்ந்து ஆபிரிக்கா அரசாங்கமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் ஜனநாயக அமைப்புக்களை தோற்றுவிக்கும் முகமாக பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.1991ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானதுடன் இந்திய அரசின் “பாரதரத்னா” விருதையும் இதே ஆண்டே பெற்றுக்கொண்டார். அத்துடன் இதே ஆண்டே தென்னாபிரிக்கா ஒலிம்பிக் கமிஷனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா உலக அமைதிக்கான நோபல் பரிசினை 1993 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். முதன் முறையாக கறுப்பின மக்கள் 1994 ஆம் ஆண்டு ஏப்பிரல் 26ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. மே மாதம் 10ஆம் திகதி முதல் கறுப்பின ஜனாதிபதியாக தென்னாபிரிக்காவில் பதவியேற்றார். தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க பாடசாலைகளில் தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி , குஜராத்தி ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க 1998 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார்.
நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின்பு 1999ஆம் ஆண்டு பதவியை விட்டு விலகினார். மண்டேலா நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் 2013ஆம் ஆண்டு ஜீன் 08ஆம் திகதி பிரிட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன் தனது 95ஆவது வயதில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி காலமானார்.
நெல்சன் மண்டேலா மறைந்திருந்தாலும் அவர் செய்த போராட்டங்கள் நியாயங்கள் என்பன கறுப்பின மக்களின் இதயங்களில் இருந்து என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது உண்மையே.
நெல்சன் மண்டேலா உலகிற்கு கூறும் விடுதலை பற்றிய கருத்து
“ஒரு உயிர் எப்போது முற்று முழுதாக விடுதலை பெறுகிறதோ அப்போது தான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது பேச்சு வார்த்தைகள் மூலம் பெற முடியாது போராடித் தான் பெற்றாக வேண்டும்”
"வாழ்க்கை என்பது போராட்டம்”

Tags:
Tamil WriteUps