நீங்க தளபதி விஜய் நடிச்ச தெறி படம் பார்த்து இருப்பீங்க. அந்த படத்தில இன்டர்வல் சீன்ல விஜய் மற்றும் அவர்களோட குழந்தையை தவிர அவருடைய ஃபேமிலிய வில்லன் கொலை பண்ணிட்டு அந்த வீட்டை கேஸ்(Gas) வச்சு வெடிக்க வச்சுருவாங்க. ஆனா அதில இருந்து விஜய்யும், அந்த குழந்தையும் எப்படி தப்பிச்சாங்கன்னு காமிக்கல. ஆனா அவங்க தப்பிச்சிட்டாங்கன்னு நமக்கு எப்படி தெரியும்? சரி, அது எப்படி நமக்கு அத காமிக்காம நாம அத தெளிவுபடுத்திகிட்டோம்? இதை எப்படி மக்கள் புரிஞ்சுப்பாங்கன்னு அவங்க முடிவு பண்ணினாங்க.
இந்த மாதிரி சினிமாவோட நாம எப்படி ஒன்றிணைகிறோம்? இதற்கான உளவியல் காரணங்கள் தெரியுமா? நாம பொழுதுபோக்குக்காக பார்க்கின்ற சினிமா நமக்கு ரொம்ப பிடிச்சு போகிறது. சில சமயம் மொக்க படம் அப்படின்னு சொல்லிட்டு நம்முடைய அடுத்த வேலையை பார்க்க போய்யிடுறம். நாம நல்ல படம், மொக்க படம் அப்படின்னு அத பிரிக்கிறதுக்கான காரணம் என்ன? அப்படி நாம ரசிக்கிற சினிமா படங்களோட ஆழ்ந்து அதோடு பயணிக்க என்னென்ன யுத்திகள் பயன்படுத்தப்படுதுன்னு தெரியுமா?
அந்த மாதிரி தான் அதுவும் நமக்குள்ள அடங்கி இருக்கு. இந்த கலர(Color) சரியா கையாண்டு ஒரு படத்தில வச்சாங்கன்னா அந்த கதை சரி இல்லைன்னா கூட நமக்கு விசுவலா(Visual) அந்த படம் ரொம்ப பிடிச்சு போய்டும். நாம ரசிக்கின்ற சினிமாக்கள், அதை தயாரிச்சவங்க சில விஷயங்கள் மூலமாகவும் நம்மள அதோட ஒன்றிணைஞ்சு வாழ வைப்பாங்க. அத நாம பெருசா கவனிச்சு இருக்க மாட்டோம். அதில சில விஷயங்களை சொல்றன். சரியா, இல்லையான்னு செக் பண்ணி சொல்லுங்க.
CINEMA PSYCHOLOGY
பொதுவா நாம ஹீரோக்களோட, கேரக்டர்கள(Characters) நம்மளாவே சித்தரிச்சு அந்த படங்கள பார்ப்போம். அப்படி நாம அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ அந்த கதாபாத்திரம் எப்படி டிசைன் செய்யப்படுது? அப்படிங்கிறதுக்கு உதாரணமா நாம ரோட்டில எங்கேயாவது போய்க்கொண்டிருப்போம், அங்கு ஏதாவது பிரச்சனை அல்லது விபத்து நடந்தாலோ! அந்த பிரச்சனையை நாம் சரி செய்யணும். அந்த விபத்தை நாம தடுக்கணும். அப்படி நாம நிஜ வாழ்க்கையில செய்ய முடியாத விஷயங்கள அந்த ஹீரோ கதாபாத்திரமாக திரைப்படத்தில செய்றாங்க. அத நாமளே செஞ்ச மாதிரி நினைச்சுக்கிட்டு நாம அந்த கதாபாத்திரத்தோட ஒன்றி வாழ ஆரம்பிச்சுடுறோம்.
சில சமயம் மற்ற கதாபாத்திரங்களும் நமக்கு அதிகமா பிடிக்கிறதுக்கான காரணம் என்ன தெரியுமா? நம்ம நண்பர்கள், காதலன் அல்லது காதலி, அம்மா, அப்பா இப்படி நம்ம வாழ்க்கையில பயணிக்கிற பயணித்த சில மனிதர்கள், அவர்கள் செய்த சில விஷயங்கள் ஞாபகம் படுத்துவதன் மூலமா நமக்கு அது பிடிச்சு போயிடுது.
சமீப காலமா நமக்கு இந்த வில்லன் கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கிறதுக்கான காரணம் என்ன தெரியுமா? நாம அதிகப்படியா பார்த்த வில்லன் கதாபாத்திரம் நம்ம விஜய்சேதுபதி தான். அவர் நடிச்ச வில்லன் கதாபாத்திரங்கள் சில சமயம் நியாயமான கோரிக்கை உடையதாகவும், சிறு நகைச்சுவை கலந்தும் இருக்கும். இருந்தும் கில்லி படத்தோட வில்லன் முத்துப்பாண்டிய நமக்கு பிடிச்சு போறதுக்கான காரணம்ன்னு தெரியுமா? அதில அவரு எவ்வளவு வில்லத்தனம் பண்ணியிருந்தாலும் அது அவர் காதலிச்ச பொண்ணுக்காக மட்டும் தான் இருக்குமே தவிர வேறு எதற்காகவும் இல்ல.
நாம யூடியூப்(YouTube) சினிமா விமர்சனம் அல்லது நம்ம நண்பர்கள் சொல்லி கேட்டு இருப்போம். இந்த படத்த நாடகம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க. படம் பார்த்த பீலே(Feel) இல்லன்னு அதற்கு காரணம். ஒரு பக்கம் அந்த படத்தோட கதையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அதற்கான முக்கிய காரணம் அந்த படத்தோட கலர்(Color) படங்களோட நிறங்கள் அந்த படத்தில இருக்கிற உணர்ச்சிகளை நமக்கு தூண்டுது.
அந்த கதாபாத்திரங்கள் என்ன உணர்றாங்க அப்படிங்கிறது அந்த படத்தோட நிறம் மூலமா நம்ம கண்களுக்குள்ள போய் நம் மூளையில அதே உணர்ச்சிய தூண்டுது. அது எப்படி வேலை செய்யுதுன்னா? நமக்கு இது புளிப்பு, இனிப்பு. அழுகை, பயம், சிரிப்பு இது எல்லாத்தையும் நாம தெரிஞ்சுக்க குழந்தையிலிருந்து நமக்கு சொல்லி சொல்லி நம்மளோட மூளையில பதிஞ்சதால நம்மளால இப்பவும் அத எளிமையா புரிஞ்சிக்க முடியுதல்ல.
சினிமா படங்களில ஒரு தேடுதலையோ, வாழ்க்கை நகர்வுகள் அடுத்த கட்டத்தை தொடும் போது அந்த சீனுக்கு முன் கூட்டியே ஏதோ தப்பா நடக்க போகுது. ஏதோ சந்தோஷமான விஷயங்கள் நடக்க போகுது. அப்படின்னு நீங்க உணர்ந்து இருக்கீங்களா? அது எப்படி வேலை செய்யுதுன்னா ஜோக்கர்(Joker) படம் நீங்க எல்லோருமே பார்த்து இருப்பீங்க. அதில அந்த ஜோக்கர் கதாபாத்திரம் படத்தோட ஆரம்பத்தில இருந்து திரையின் இடது புறத்திலிருந்து, வலதுபுறம் போற மாதிரி இருக்கும். தான் எப்படியாவது நல்ல நிலைமைக்கு போகணும். அப்படின்னு அந்த கதாபாத்திரம் நகரும். ஆனா இடையில் பல இடங்களில அவன் முன்னாடி போக போக, ஜோக்கர பின்னாடியே அடிச்சு தள்ளிட்டு இருப்பாங்க. அது எல்லாம் வலதுல இருந்து, இடது புறம் போற மாதிரி அமைஞ்சிருக்கும். பிறகு ஜோக்கர் கொஞ்சம் கொஞ்சமாக கெட்ட வழியில போறத வலதுல இருந்து இடதுபுறம் போற மாதிரி இருக்கும். இந்த மாதிரி பல படங்களில இதே விஷயத்தை கையாண்டு இருப்பாங்க.
இந்த உலக சினிமாக்கள் மொத்தமா ஒரு ஏழு வகையில் மட்டுமே அமைஞ்சிருக்கும். இப்போ நான் சொல்லுற விஷயங்களை வச்சு நீங்களே அத உணருவீங்க.
- ஒரு ஹாரர்(Horror) படம் அப்படின்னா ஒரு பாழடஞ்ச வீடு அத புதுப்பிச்சு அந்த வீட்டிற்கு குடி வர்ற ஃபேமிலி. அங்க பேய் இருக்கிறத உணர்ந்து அங்க இருந்து வெளியேறினாங்களா இல்லையா அந்த பேய்ய எப்படி சமாளிச்சாங்க அப்படிங்கிறது தான் கதை.
- ஒரு சைக்கோ(Psycho) படம் அப்படின்னா ஒரு சைக்கோ சம்மந்தமே இல்லாம பல பேர கொடூரமா கொலை பண்ணுவான். அந்த கொலையெல்லாம் பண்ணினது யாரு அப்படின்னு கண்டுபிடிக்கிற ஹீரோ கடைசியில அந்த சைக்கோ சிறு வயதிலிருந்து தான் பட்ட அவமானங்கள், கஷ்டங்களால தான் இப்படி பண்ணான்னு சிம்பதிய(Sympathy) கிரியேட்(Create) பண்ணுவாங்க.
- ஒரு காதல்(Love) படமா இருந்தா ஹீரோ அவனுடைய வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருப்பான். திடீர்னு ஏதோ ஒரு இடத்தில ஒரு அழகான பொண்ண பார்த்து அந்த பொண்ணை காதலிக்கிற வேலையில இறங்கி அதில எப்படி பல தடைகளை கடந்து ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்றாங்களா இல்லையா? அப்படிங்கறதுதான் கதை.
- ஒரு ரிவெஞ்ச்(Revenge) படம் அப்படின்னா ஹீரோ தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருப்பாரு. வில்லன் அவனுடைய வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சுருவாரு. அத அந்த ஹீரோ தாங்காம அந்த வில்லனை என்ன செய்கிறாரு? அவருடைய இலக்கை அடைஞ்சாரா இல்லையா? அப்படிங்கறதுதான் கதை.
- இந்த கதை ஆக்சன்(Action) படங்களுக்கும் பொருந்தும்.
- ஒரு ஃபேண்டஸி(Fantasy) சூப்பர் ஹீரோ படம் அப்படின்னா ஒரு அப்பாவி ஹீரோக்கு எதிர்பாராதவிதமா ஒரு அபூர்வ சக்தி கிடைக்கும். அதே சமயம் அந்த ஊரையோ அல்லது வேறு ஒரு விஷயத்தையோ அழிக்க வில்லன் கிளம்பி வர அந்த சூப்பர் ஹீரோ எப்படி அந்த வில்லனை சமாளிக்கிறாரு. அப்படிங்கறதுதான் கதை.
- ஒரு சயின்ஸ் பிக்ஷன்(Science Fiction) படமா இருந்தால் ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கும் போதோ அல்லது அவர் கண்டுபிடிச்ச கருவியின் மூலமா நடந்த விளைவுகள சரி செய்கிற மாதிரி தான் அந்த கதை அமைஞ்சிருக்கும். ஒரு அட்வெஞ்சர்(Adventure) படமாக இருந்தால் ஹீரோவும், அவர் நண்பர்களும் சேர்ந்து ஒரு புதையலையோ அல்லது வேறு விஷயத்தையோ தேடி போக கடைசியில அவங்களுடைய வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்கிற மாதிரி தான் அந்த கதை அமையும்.
இந்த ஏழு பிரிவின் வழியா மட்டும் தான் இந்த உலக சினிமாவே அடங்கி இருக்கு. இதில தன் திறமையால மக்கள் விரும்புற மாதிரியான படங்கள கொடுக்கிறவங்க மட்டும் தான் சிறந்து விளங்குகிறாங்க. இந்த மாதிரி உளவியல் ரீதியான விஷயங்கள் நாம இந்த சினிமாக்களோட ஒன்றிணைஞ்சு அதோட பயணிக்க உதவுது. இந்த சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமே அமையல. நம்ம வாழ்க்கையை வாழ சிறுதுண்டு பிரசுரத்தை தந்துட்டு போகும் அந்த பிரசுரம் நமக்கு தேவைன்னா வச்சுக்குவம் இல்லன்னா அங்கேயே விட்டுட்டு போயிடுவம்.
Tags:
Tamil WriteUps